தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mangalya Dosham: மாங்கல்ய தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்!

Mangalya Dosham: மாங்கல்ய தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்!

Dec 13, 2022, 02:58 PM IST

google News
மாங்கல்ய தோஷ பரிகாரங்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.
மாங்கல்ய தோஷ பரிகாரங்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.

மாங்கல்ய தோஷ பரிகாரங்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.

தோஷங்கள் என்பது அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப பின் தொடர்ந்து வரும் பாவங்கள் என ஆன்மீகம் கூறுகிறது. பலரும் இதனை நிவர்த்தி செய்ய முடியாது என்று நம்புகின்றனர். ஆனால் அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன.

சமீபத்திய புகைப்படம்

மகரத்தில் நுழையும் சுக்கிரன்! திருமண யோகம் கைக்கூடும் 6 ராசிகள்! இனி மஜாதான்!

Nov 28, 2024 07:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.29 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன்கள் இதோ!

Nov 28, 2024 04:23 PM

வெறிபிடித்து வரும் செவ்வாய்.. அள்ளி அள்ளி சுவைக்கும் ராசிகள்.. இனி பொட்டி பொட்டியாக வரும்!

Nov 28, 2024 04:06 PM

உதயத்தில் போட்டு சாத்த போகும் புதன்.. பணத்தில் பிச்சுகிட்டு பறக்க போகும் ராசிகள்.. இனி உச்சகட்ட சந்தோஷம் வரும்

Nov 28, 2024 04:02 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..யாருக்கு லாபமான நாள்?..நாளை நவ.29 ராசிபலன்கள் இதோ..!

Nov 28, 2024 04:00 PM

சனி தாண்டவம்.. இனி தொட்டுப் பார்க்க முடியாத ராசிகள்.. முடிஞ்சா டச் பண்ணி பாருங்க தெரியும்!

Nov 28, 2024 12:45 PM

குறிப்பாகப் பெண்களுக்குப் பெண் தொடர்ந்து வரும் தோஷங்களில் மாங்கல்ய தோஷமும் ஒன்று. இதனை நிவர்த்தி செய்ய சில எளிய பரிகாரங்கள் உள்ளன அது குறித்து இங்கே காண்போம்.

மாங்கல்ய தோஷ பரிகாரங்கள்

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் அன்று மனம் உருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு மாங்கல்யத்திற்கு ஆபத்து வருமா என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்குச் சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சக்கரை பொங்கல், பால் பாயசம், பானகம் நிவேதனம் செய்து சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து பைரவரை வழிபட வேண்டும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜை செய்தல் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம், எலுமிச்சை அன்னம் படைத்து வழிபாடு செய்வது தோஷ நிவர்த்திக்குச் சிறப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.

எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டுள்ளது என அறிந்து அந்த கிரகத்திற்குப் பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

மாங்கல்ய தோஷத்திற்குச் செல்ல வேண்டிய கோயில்கள்

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்கள நாதரைச் சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷ தாக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் உள்ள பிரளய நாதர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தோஷத்தின் தாக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்யாண ராமர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும் எனக் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசலில் வீற்றிருக்கும் வல்லப விநாயகர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மாங்கல்யம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிரஞ்சீவியாக வீற்றிருக்கும் அபய வரத ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் இத்தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

சாத்தூரில் உள்ள ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் எனக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள கெங்கமுத்து பாலமேடு நாகம்மாள் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மங்கள்யதோஷம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் எப்படிப்பட்ட மாங்கல்ய தோஷமாக இருந்தாலும் அது விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அடுத்த செய்தி