குரு கும்மியாட்டம் தொடங்கியாச்சு.. பணத்தில் விளையாட்டு ஆரம்பம்.. கதவை தட்டும் அதிர்ஷ்ட ராசிகள்!
May 10, 2024, 03:15 PM IST
Guru Bhagavan: குரு பகவான் தனுசு ராசி மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் யோக வாழ்க்கையை பெறுகின்றனர்.
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய இடமாற்றம் குரு பகவானின் பெயர்ச்சியாக கருதப்படுகிறது. குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் குரு பகவான் தனுசு ராசி மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் யோக வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகம் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பான மாற்றங்கள் உண்டாகும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களுக்கு இனிமையான வாழ்க்கை உண்டாகும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் கடன் சிக்கல்கள் விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு புதிய நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முன்னேற்றம் இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். ராஜ வாழ்க்கையை உங்களுக்கு குரு பகவான் கொடுப்பார். அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. கூட்டு முயற்சிகள் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கும்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைபட்டு கடந்த பணம் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தை தவிர மற்ற எந்த விஷயத்திலும் உங்களுக்கு சிக்கல்கள் எதுவும் ஏற்படாது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9