Suriyan Transit: புதையலை புதைக்க போகும் சூரியன்.. நட்சத்திரத்தில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்
May 08, 2024, 10:00 PM IST
Suriyan Transit: 27 நட்சத்திரங்களில் பரணி இரண்டாவது நட்சத்திரமாகும். இதனுடைய அதிபதியாக சுக்கிரன் விளங்குகின்றார். சூரிய பகவானின் பரணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் குறுகிய காலமாக இருந்தாலும் இவருடைய செயல் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சூரிய பகவான் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு வந்தா.ர் வரும் மே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
27 நட்சத்திரங்களில் பரணி இரண்டாவது நட்சத்திரமாகும். இதனுடைய அதிபதியாக சுக்கிரன் விளங்குகின்றார். சூரிய பகவானின் பரணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சூரிய பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுன ராசி
சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். கடின உழைப்பால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால கவலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
சிம்ம ராசி
சூரிய பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பால் உங்களுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். இதுவரை மற்றவர்களிடம் ஏற்பட்டு வந்த மனக்கசப்புகள் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9