Good Luck : சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. ஆடி மாதத்தில் சிவன் அருளால் செல்வம் குவியும் பாருங்க!
Jul 29, 2024, 06:26 AM IST
Good Luck : ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். இந்த 3 ராசிக்காரர்களுக்கு இறைவனின் அருள் எப்போதும் இருக்கும். இவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். சிவபெருமான் எந்தெந்த ராசிகளில் எந்தெந்த வகைகளில் அருள்பாலிக்கிறார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Good Luck : சனாதன தர்மத்தில் ஆடி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகாதேவருக்கு மிகவும் பிடித்த மாதம் ஆடி மாதம். தேவர்களின் இறைவனான மகாதேவனை மகிழ்விப்பதன் மூலம் வாழ்வின் தொல்லைகள் நீங்கும். சாவான் மாதத்திலிருந்து, படைப்பின் பொறுப்பு சிவபெருமானின் தோள்களில் விழுகிறது. ஏனெனில் விஷ்ணு தேவசயனி ஏகாதசியிலிருந்து 4 மாதங்களுக்கு யோக நித்திரையில் செல்கிறார்.
சமீபத்திய புகைப்படம்
அதே சமயம் ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். இந்த 3 ராசிக்காரர்களுக்கு இறைவனின் அருள் எப்போதும் இருக்கும். இந்த 4 ராசிக்காரர்கள் சிவனை பக்தியுடன் வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். சிவபெருமான் எந்தெந்த ராசிகளில் எந்தெந்த வகைகளில் அருள்பாலிக்கிறார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் மிகவும அபரிமிதமான அருள் உண்டு. துலாம் ராசியை பொருத்த மட்டில் மகாதேவருக்கு மிகவும் பிடித்தமானது. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசியாக இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போதும் இறைவனை மகிழ்விப்பதில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை. துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். எனவே, இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.
அவர்களின் நல்வாழ்வுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார். வாழ்க்கையில் நீங்கள் சிரமங்களை சந்திக்கும் போதெல்லாம், சிவ சாலிசாவை ஓதி இறைவனை மனதார வணங்க வேண்டும். இது துலாம் ராசிக்காரர்களுக்கு மென்மேலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அள்ளித் தரும். சிவபெருமானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
கும்பம்
சிவபெருமானுக்கு விருப்பமான ராசிகளில் கும்பத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. கும்பத்தை ஆளும் கிரகம் சனி. கும்ப ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதில் சமாளிப்பார்கள். தொல்லைகள் தூரம் போகும். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சிவபெருமானின் அருள் பெற்றவர்கள். கும்ப ராசிக்காரர்கள் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சிவ சாலிசாவை ஓதி மனதார இறைவனை வணங்க வேண்டும். இதன் மூலம் சிவபெருமானை மகிழ்விப்பது மட்டுமின்றி சனியின் சேட் சதியின் தீமைகளையும் குறைக்கலாம்.
மகரம்
இந்த ராசியை ஆளும் கிரகம் சனி தேவன். மகர ராசிக்காரர்கள் எப்போதும் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் இயற்கையில் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். மகர ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு விருப்பமான ராசியில் இருப்பதால், சிவபெருமானை மகிழ்விக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. சிவபெருமான் எப்போதும் அவர்களை சிரமங்களில் இருந்து காத்து நிற்பார். அதே சமயம் மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபடுவதன் மூலமும், சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் செய்வதன் மூலமும் பணியிடத்திலும், கல்வியிலும் உயரங்களை அடையலாம். சிவபெருமானை வழிபடுவதன் மூலம், இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் தோஷமும் குறைகிறது. நிம்மதி வந்து சேரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்