தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Puja Room: பூஜையறையில் தவிர்க்க வேண்டியவை!

Puja room: பூஜையறையில் தவிர்க்க வேண்டியவை!

Dec 14, 2022, 06:46 PM IST

google News
பூஜை அறையில் நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கே காண்போம்.
பூஜை அறையில் நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கே காண்போம்.

பூஜை அறையில் நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கே காண்போம்.

வீட்டில் உள்ள அறைகளில் பூஜை அறை ஒரு முக்கியமான அங்கமாகும். அந்த வகையில் பூஜை அறையில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் என்னவென்பதை நாம் விரிவாக பார்ப்போம்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!

Dec 12, 2024 04:46 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.13 உங்களுக்கு சாதகமாக இருக்குமா? - ராசிபலன் இதோ!

Dec 12, 2024 03:36 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.13 எந்த ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும் பாருங்க..!

Dec 12, 2024 03:18 PM

கேது பகவானின் பண பலன்களை பெறுகின்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு அள்ளி கொட்டுகிறார்.. யோகம் வந்துவிட்டது!

Dec 12, 2024 01:22 PM

சனி விளையாட்டு.. வக்கிரத்தில் வாங்கும் ராசிகள்.. நெருப்பாய் இருப்பீர்கள்.. பணம் தாறுமாறாக கொட்டும்

Dec 12, 2024 01:16 PM

குரு தூதுவனாக துவம்சம் செய்வார்.. உச்சத்தில் ஓடும் ராசிகள்.. பணம் தலை கீழாக வருகிறது..!

Dec 12, 2024 12:56 PM

பூஜை அறையில் தவிர்க்க வேண்டியவை

  • பூஜை அறையிலோ வீட்டிலோ தெய்வ படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர்கள் தெற்கு பகுதியில் வடக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
  • தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்கூடாது. கிழக்கு பக்கம் முடியாவிட்டால் தெற்கு பக்கத்தை தவிர பிற திசைகளை பார்த்து படங்களை வைத்து வணங்கலாம்.
  • நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
  • அன்னம் முதலியவற்றை எவர் சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
  • திங்கள்கிழமை என்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரையை கையால் தொடக்கூடாது. தனது வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு ஒருபோதும் செல்லக்கூடாது.
  • எரியும் விளக்கில் எண்ணை அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதை தன் தலையில் தடவிக் கொள்வதும் ஒரு பொழுதும் கூடாது.
  • சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டுவைக்கக் கூடாது. உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
  • வணங்கி வீடு திரும்பும் பொழுது லட்சுமி தேவியும் நம்முடன் நம்முடைய வீட்டுக்கு வருகின்றாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோயில்களிலிருந்து வீடு திரும்பும் அங்கே உட்காரக்கூடாது.
  • மேற்கண்ட தகவல்களை பூஜையறையில் நம்முடைய இல்லத்தில் முறையாக வழிபாடு செய்து வந்தால் நம்முடைய இல்லத்திற்கு லட்சுமி தேவி தேடி வருவாள் என்பது ஐதீகமாகும்.

அடுத்த செய்தி