தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Special: அள்ளித்தரும் ஆடி மாதம்..முக்கியமான வழிபாடுகள் என்னென்ன?

Aadi Special: அள்ளித்தரும் ஆடி மாதம்..முக்கியமான வழிபாடுகள் என்னென்ன?

Karthikeyan S HT Tamil

Jul 19, 2023, 01:34 PM IST

google News
ஆடி மாதத்தில் வரும் முக்கியமான வழிபாடுகள் மற்றும் விரதங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
ஆடி மாதத்தில் வரும் முக்கியமான வழிபாடுகள் மற்றும் விரதங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

ஆடி மாதத்தில் வரும் முக்கியமான வழிபாடுகள் மற்றும் விரதங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

ஆடி மாதம் வந்துவிட்டாலே கோயில்கள் களை கட்டும். அதுவும் ஆடி வெள்ளி, ஆடித்தவசு, ஆடி பெளர்ணமி நாட்களில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுவர்.

சமீபத்திய புகைப்படம்

'நிதானம் தேவை..நினைத்தது நடக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Dec 02, 2024 06:45 AM

’மேஷம் முதல் மீனம் வரை!’ சாதூர்யம்! அதிகாரம்! செல்வம் தரும் கூர்ம யோகம் யாருக்கு?

Dec 01, 2024 08:50 PM

Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ நாளை டிச.02 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Dec 01, 2024 08:21 PM

துலாம் முதல் மீனம் ராசி வரை.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:59 AM

சுக்கிரன் பெயர்ச்சி..மேஷம் முதல் கன்னி ராசி வரை..இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:30 AM

குரு 2025-ஆம் ஆண்டு வரை விடமாட்டார்.. சொல்லி அடித்த போகும் ராசிகள்.. இவர்கள் இனிமேல் கில்லி தான்

Dec 01, 2024 07:15 AM

ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் திருவிழாக்களின் தொடக்கம் அமைகிறது. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

ஆடி மாதம் அம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகிவிடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், அதன் சிறப்புகள் பற்றி இங்கு காண்போம். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோயிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். 

ஆடி செவ்வாயன்று சுமங்கலிகள் தாலி பாக்கியத்துக்கும், கன்னி பெண்கள் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறவும் அவ்வையார் விரதம் இருப்பர். இந்நாளில் உப்பில்லாத கொழுக்கட்டை, மாவிளக்கேற்றியும் புங்கமரத்தின் இலையால் அம்மனுக்கு பூஜை செய்வர். பின்னர் பெண்கள் கொழுக்கட்டையை சாப்பிட்டு விரதத்தை முடிப்பர்.

ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வருகிறது. ஆடி மாதத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 9-ல் ஆடி கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்தால் முருகன் மனம் குளிர்ந்து அருள்வார் என்பது நம்பிக்கை.

ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16-ல் வருகிறது. இந்நாளில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாபநாசம், கோடிக்கரை தீர்த்தங்களில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி, நெல்லை பாபநாசம் சொரிமுத்தையனார் கோயில்களில் ஆடி அமாவாசை வழிபாடு நடைபெறும்.

ஆவணி பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமைகளில் (ஆக.25) சுமங்கலிகள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வரலட்சுமி விரதமிருப்பர். ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு விரதம் இருப்பது நல்லது. இதனால் சுக்ர தோஷம் நீங்கி திருமண யோகம் உண்டாகும். இந்தாண்டு ஆடி 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் ஆடி வெள்ளி வருகிறது. (ஜூலை 21, 28, ஆகஸ்ட் 4, 11). ஜூலை 22-ல் ஆடிப்பூர திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆண்டாள் கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெறும். இந்நாளில் சிவன் கோயில்களில் பார்வதி அம்மனுக்கு பூப்புனித நீராடல், வளைகாப்பு நடத்துவர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி