தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Nambiyandar Nambi: எண்ணியதை முடிக்கும் திறன் கொண்டவர்.. திருமுறைகளை தொகுத்தவரான நம்பியாண்டார் நம்பியின் கதை

Nambiyandar Nambi: எண்ணியதை முடிக்கும் திறன் கொண்டவர்.. திருமுறைகளை தொகுத்தவரான நம்பியாண்டார் நம்பியின் கதை

Manigandan K T HT Tamil

Mar 02, 2024, 06:00 AM IST

google News
நம்பியாண்டார் நம்பி அவர்கள், ஆன்மிக உலகில் செயற்கரிய செயல்களைச் செய்தவர். விடா முயற்சி, எண்ணியதை முடிக்கும் திறன் கொண்ட இவரை, உலகம் இன்றும் போற்றித் துதிக்கின்றது. (@rdx98eshvar)
நம்பியாண்டார் நம்பி அவர்கள், ஆன்மிக உலகில் செயற்கரிய செயல்களைச் செய்தவர். விடா முயற்சி, எண்ணியதை முடிக்கும் திறன் கொண்ட இவரை, உலகம் இன்றும் போற்றித் துதிக்கின்றது.

நம்பியாண்டார் நம்பி அவர்கள், ஆன்மிக உலகில் செயற்கரிய செயல்களைச் செய்தவர். விடா முயற்சி, எண்ணியதை முடிக்கும் திறன் கொண்ட இவரை, உலகம் இன்றும் போற்றித் துதிக்கின்றது.

தமிழுக்காக தொண்டாற்றியவர்களில், மிகவும் முக்கியமானவர் உ.வே .சாமிநாத ஐயர். உ.வே.சா. தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில், அழிவு நிலையில் இருந்த பழங்காலத் தமிழ் இலக்கியங்களைத் தேடி தேடி, அவற்றை அச்சில் ஏற்றியபெருமைக்கு உரியவர். அதன் காரணமாக தான், தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், பெருமையும், இன்றும் நம்மிடையே நிலைபெற்று நிற்கிறது. ஆகவே அவரை " தமிழ் தாத்தா "என்று அன்புடன் அழைக்கிறோம்.

சமீபத்திய புகைப்படம்

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 11:08 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 10:45 AM

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Dec 04, 2024 10:25 AM

நம்பியாண்டார் நம்பி அவர்கள், ஆன்மிக உலகில் செயற்கரிய செயல்களைச் செய்தவர். விடா முயற்சி, எண்ணியதை முடிக்கும் திறன் கொண்ட இவரை, உலகம் இன்றும் போற்றித் துதிக்கின்றது. ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி, அவை அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, பாதுகாத்து இன்று நமக்கு தந்தருளியவரும் இவரே.

திருத்தொண்டர்களின் வரலாற்றை கூறும் "திருத்தொண்டர் திருவந்தாதி" எனும் நூலை படைத்தவர் இவர். தேவாரப் பாடல்களைத் தேடி கண்டறிந்து, அவற்றை திருமுறைகளாக வகுத்ததும் இவரே. ஞான விநாயகரிடம் ஞானோபதேசம் பெற்றவர்.

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் பொல்லா பிள்ளையார் அனுகிரகம் பெற்றவர். பல திருமுறைகளையும், பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்தி 11ம் திருமுறையில் பாடியவர்.

கடவுளை நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பு. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் வழியில் 18 கிலோமீட்டரில் இருக்கும் திருநாரையூரில் உள்ள சவுந்தர்யேசுவரர் ஆலய, பிள்ளையாருக்கு, இவரின் தந்தை, தினமும் நைவேத்யம் செய்து வழிபடுவது வழக்கம். நம்பி இதைப்பார்த்து பிள்ளையார் இவற்றை தினம் ஏற்று அருள்வதாக எண்ணிக் கொண்டிருந்தார்.

திருநாரையூர் சுந்தரேஸ்வரர் கோவில் பொள்ளாப் பிள்ளையார் (பொள்ளா என்றால் உளியால் செதுக்கப்படாத அதாவது சுயம்பு). இந்த ஆலயத்தின் அர்ச்சகர் அனந்தீசர். பிள்ளையார் பூஜை முடிந்து நைவேத்ய பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கிடுவார் ‌. இவரது திருக்குமரன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி. வேதக்கற்றல், வேதக் கலைகளைக் கற்றுவரும் குழந்தை.

தந்தை வெளியூர் சென்று இருந்த சமயம், ஒருநாள், நம்பிக்கு பூஜைப் பொறுப்பு வந்தது. தந்தை போல் பிள்ளையாருக்கு பூஜைகள் நைவேத்யம் செய்து, பின்பு அதனை சாப்பிடும்படி பிள்ளையாரை வேண்ட, பிள்ளையார் அமைதியாக இருக்க, மனம் வருந்தி, பிள்ளையார் மடியில் தன் தலையை மோதி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த, யானை முகன் அங்கு தோன்றி நைவேத்தியத்தை உண்டார்.

ஆரம்பத்தில் இதை நம்ப இயலாத அனைவரும், பின்னர் கண்ணால் பார்த்து, உறுதி செய்து கொண்ட பின், விநாயகர் அனுக்கிரஹம் பூர்வமாக பெற்றவர் இவர் என எண்ணி மகிழ்ந்தனர். அரசரின் காதுகளுக்கும் இவ்விஷயம் செல்ல, அவரும் பரிவார, பக்ஷ்ணங்கள், பழங்களுடன் வந்து இதை உறுதி செய்து மகிழ்ந்தார்.

திருமுறைகளை, புதுப்பிக்கும் ஆர்வமுள்ள, மன்னர்ராஜராஜ சோழன், நம்பி மூலம், தில்லை நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு பகுதியில் அவை இருப்பதையும், சமயக் குரவர்களின் சிலைகள் வைத்து வணங்கி, அதை அடையலாம் என அறிந்தார்.

சைவர்மூவர் சிலைகளை வடித்து, பூஜித்து விட்டு, திருமுறை அறையில், மன்னன் ராஜராஜ சோழனுடன் சுவடிகளைத்தேட, அப்போது பனை ஓலைகளில் எழுதப்பட்ட பதிவுகளை, கரையான் அரித்திருந்தது. எண்ணை இட்டு சுத்தம் செய்து எடுத்த பதிகங்கள் 796. இதில் ஞானசம்பந்தரின் தரும் பதிகங்கள் 384, நாவுக்கரசரின் திருப்பதிகங்கள் 312, சுந்தரர் அருளியது 100. இந்த அளவு கஷ்டப்பட்டு, திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டன.

இவ்வாறு பன்னிரு திருமுறைகளான தேவாரம் திருவாசகம் போன்றவை, இன்று, நமக்கு கிடைக்கவும், அனைத்துக் கோவிலில் அவை ஒலிக்கவும் காரணமாக இருந்தவரிவர். ஆலயத்திற்கு வெளியே இவர் தம் நினைவு மண்டபம் உள்ளது. சிற்ப வடிவில் அருளுகிறார்.

இவருக்கு வைகாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் குருபூஜை. அன்று இரவு முழுவதும், தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வர். இந்த விழாவை "திருமுறை விழா" என்று அழைக்கின்றார்கள்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி