தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வக்ர குருவால் உச்சம் தொடும் கும்பம்! கொட்ட போகும் பணம்! இனி கும்மாளம்தான்! குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!

வக்ர குருவால் உச்சம் தொடும் கும்பம்! கொட்ட போகும் பணம்! இனி கும்மாளம்தான்! குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Oct 10, 2024, 04:12 PM IST

google News
Guru Vagra Peyarchi 2024: அடுத்த 4 மாதங்களில் மிகப்பெரிய வாழ்வியல் முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். இறை வழிபாடு சங்கடங்களை தீர்த்து சாதனைகளாக மாற்றும். சொத்துக்கள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் தீர்வுக்கு வரும்.
Guru Vagra Peyarchi 2024: அடுத்த 4 மாதங்களில் மிகப்பெரிய வாழ்வியல் முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். இறை வழிபாடு சங்கடங்களை தீர்த்து சாதனைகளாக மாற்றும். சொத்துக்கள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் தீர்வுக்கு வரும்.

Guru Vagra Peyarchi 2024: அடுத்த 4 மாதங்களில் மிகப்பெரிய வாழ்வியல் முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். இறை வழிபாடு சங்கடங்களை தீர்த்து சாதனைகளாக மாற்றும். சொத்துக்கள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் தீர்வுக்கு வரும்.

கும்ப ராசிக்கு 4ஆம் இடமான ரிஷபம் ராசியில் அமர்ந்து உள்ள குரு பகவான் ஆனவர் சில பிரச்னைகளை கொடுத்து வந்தார். ஆனால் குரு வக்ரம் பெற்ற நிலையில் பிரச்னைகள் தீர்ந்து, வளர்ச்சிகள் ஆரம்பம் ஆகும். இதனால் சொத்துக்கள் மற்றும் சொந்தங்கள் வழியே எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

இதுவரையில் அர்த்தாஷ்டம குருவாக இருந்து சொத்துக்கள் மற்றும் சொந்த பந்தங்கள் வழி பிரச்சனைகளை தந்த குரு பகவான், தற்போது உங்களுடைய வித்தை, திறமை வழியாக அனுகூலங்களை தரப்போகிறார்.

அடுத்த 4 மாதங்களில் மிகப்பெரிய வாழ்வியல் முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். இறை வழிபாடு சங்கடங்களை தீர்த்து சாதனைகளாக மாற்றும். சொத்துக்கள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் தீர்வுக்கு வரும். நிலம், வீடு உள்ளிட்ட சொத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தால் முடிவுக்கு வரும். உங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் சற்று மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முறையான பேச்சுவார்த்தை மூலம் உடன்படிக்கைக்கு வர நல்ல காலகட்டம் இது.

எதிரிகளாக இருந்தவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். சொந்த பந்தங்கள் வழியில் இருந்த சிக்கல்கள் தீரும். விட்டுக் கொடுத்து நீங்கள் செல்லும் போது நன்மைகள் உண்டாகும்.

கடும் உழைப்பாளியான உங்களுக்கு குடும்பத்தினர் வழியில் ஆதரவு பெருகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் நீங்கள் செய்யும் வேலைகள் அனுகூலங்களை உண்டாக்கும்.

பேச்சில் கவனம் தேவை!

அதே வேளையில் 2ஆம் இடத்தில் ராகுவும், 8ஆம் இடத்தில் கேது பகவானும் உள்ளனர். இதனால் பேச்சில் மிக கவனமாக இருக்க வேண்டும். பிறர் உடன் பேசும்போது எச்சரிக்கை உணர்வுடன் பேசுவது முக்கியம். புதிய அறிமுகங்களில் எச்சரிக்கையாக இருங்கள், நிதி சார்ந்த விஷயங்களை புதியவர்களை நம்பி முதலீடு செய்வதில் கவனம் தேவை.

தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைக்க கூடாது. தொழில் கூட்டளிகளை நம்பி நீங்கள் எடுக்கும் முயற்சிகள் விரையங்களில் முடியலாம். அதே நேரத்தில் குரு பகவான் மூலம் சொத்துக்கள் வழியாக லாபம் கிடைக்கும். சொந்தங்கள் வழியா எதிர்பாராத தன லாபங்கள் உண்டாகும்.

ஐந்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பது நன்மைகளையும், அனுகூங்களையும் உண்டாக்கும். புதிய வாய்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். விரக்தி மனநிலை மாறும், புதிய உற்சாகம் பிறக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி