தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi Luck: மகர ராசியை பார்க்கும் குரு.. விருச்சிகத்தில் சமசப்தமாக அமரும் குரு.. கடகத்திற்கு என்ன கிடைக்கும்?

Guru Peyarchi Luck: மகர ராசியை பார்க்கும் குரு.. விருச்சிகத்தில் சமசப்தமாக அமரும் குரு.. கடகத்திற்கு என்ன கிடைக்கும்?

Feb 22, 2024, 08:37 AM IST

google News
குரு பகவானை பொருத்த அளவு அவர் இருக்கின்ற இடத்தை விட,பார்க்கின்ற பார்வைக்குதான் சிறப்பு அதிகம்.
குரு பகவானை பொருத்த அளவு அவர் இருக்கின்ற இடத்தை விட,பார்க்கின்ற பார்வைக்குதான் சிறப்பு அதிகம்.

குரு பகவானை பொருத்த அளவு அவர் இருக்கின்ற இடத்தை விட,பார்க்கின்ற பார்வைக்குதான் சிறப்பு அதிகம்.

மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி ஆகியவை நான்காம் வீடாக இருக்கிறது. இந்த வீட்டில் சந்திர பகவான் ஆட்சி புரிகிறார். இது அவருடைய சொந்த வீடாக வருகிறது. இதனால் கடக ராசி காரர்களுக்கு தாய் உள்ளமானது இயல்பாகவே இருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்.. இந்த வாரமே இந்த நான்கு ராசிகளின் வாழ்க்கை மாறும்.. வருமான வளர்ச்சி இருக்கும்!

Dec 24, 2024 06:58 AM

6 வது வீட்டில் சனி..தொழிலில் சிரமம், தடுமாற்றம்.. பாடம் கற்பிக்கப்போகும் காகவாகனன்- தனுசு ராசிக்கு 2025 எப்படி?

Dec 24, 2024 06:52 AM

இந்த ராசிகளின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.. கேதுவின் பெயர்ச்சி இவர்களுக்கு சாதகமாக இருக்கு!

Dec 24, 2024 06:51 AM

சனியின் நேரடி பெயர்ச்சி.. மகரம், ரிஷபம், கன்னி ராசிகளின் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. கஷ்டங்கள் விலகும்!

Dec 24, 2024 06:43 AM

'சிறப்பான நாள் மக்களே.. செல்வம் தேடி வரும்.. கவனமா முடிவெடுங்க' இன்று டிச.24 மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளின் பலன்கள்!

Dec 24, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.24 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 23, 2024 04:55 PM

குரு பகவானை பொருத்த அளவு அவர் இருக்கின்ற இடத்தை விட,பார்க்கின்ற பார்வைக்குதான் சிறப்பு அதிகம். 

அவர் தற்போது பதினொன்றாம் வீட்டிற்கு வர இருக்கிறார். அவர் உங்களது மூன்றாம் வீடான கன்னி ராசி, ஐந்தாம் வீடான விருச்சிக ராசி, ஏழாம் வீடான மகர ராசி ஆகியவற்றை பார்க்க போகிறார்.

இதில் மூன்றாம் வீட்டை என்பது உப ஜெய ஸ்தானம் என்று சொல்வோம். இந்த இடத்தை குரு பகவான் தன்னுடைய சிறப்பு ஐந்தாம் பார்வையாக பார்ப்பதினால் கடக ராசி அன்பர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். 

நினைத்த படிப்பை பார்க்கும் வாய்ப்பு அமையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை கொடுக்கும். ஐந்தாமிடமான விருச்சிக ராசியின் மீது குரு பகவான் உடைய பார்வை சம சப்தமாக விழுவதினால், இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை கொடுக்கும்.

கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால், உடனடியாக பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. புத்திர பாக்கியம் உருவாகும். 

உங்களுடைய ராசிக்கு இது பஞ்சமஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதினால், நினைத்து பார்க்க முடியாத அளவில் வெற்றிகள் உங்களுக்கு வந்து சேரும்.

ஏழாம் இடமான மகர ராசியை குருபகவான் பார்ப்பதினால் ஆணாக இருக்கக்கூடிய கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அழகான பெண்மணி மனைவியாக அமைவார். பெண்ணாக இருக்கக் கூடிய கடக ராசிக்காரர்களுக்கு நல்ல கணவனும் அமைவார்கள். ஆகையால் இந்த ஆண்டு அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும்” என்று பேசினார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி