தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: ’மகரத்திற்கு கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு!’ மே 1 முதல் பொற்காலம்தான்!

Guru Peyarchi 2024: ’மகரத்திற்கு கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு!’ மே 1 முதல் பொற்காலம்தான்!

Kathiravan V HT Tamil

Feb 23, 2024, 02:25 PM IST

google News
”Guru Peyarchi 2024 Rasi Palan: சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால், மகர ராசிக்கும் பொருளாதார மேன்மை கிடைக்கும், வேலையில் அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளுக்கு பலன்கள் கிடக்கும்”
”Guru Peyarchi 2024 Rasi Palan: சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால், மகர ராசிக்கும் பொருளாதார மேன்மை கிடைக்கும், வேலையில் அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளுக்கு பலன்கள் கிடக்கும்”

”Guru Peyarchi 2024 Rasi Palan: சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால், மகர ராசிக்கும் பொருளாதார மேன்மை கிடைக்கும், வேலையில் அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளுக்கு பலன்கள் கிடக்கும்”

வரும் மே மாதம் ஒன்றாம் தேதி மதியம் 3.39 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். 5இல் குரு கெஞ்சினாலும் கிடைகாது என்பர்கள், அந்த வகையில் மகர ராசிக்கு ஐந்தாம் இடமான ரிஷபத்தில் குரு பகவான் வருகிறார். நிறைய நன்மைகளை தரும் குரு பெயர்ச்சியாக இந்த குரு பெயர்ச்சி விளங்கும். 

சமீபத்திய புகைப்படம்

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.25 எதிர்பார்த்தபடி உங்கள் கையில் பணம் சேருமா?

Dec 24, 2024 03:48 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.25 யாருக்கு பிஸியான நாளாக இருக்கும் பாருங்க..!

Dec 24, 2024 03:38 PM

இந்த 3 ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் உறுதி! டிசம்பரில் பூர்வாஷாத நட்சத்திரத்தில் நுழையும் சூரியன்!

Dec 24, 2024 02:31 PM

5ஆம் இடத்திற்கு வரும் குருபகவான் ஆனவர் உங்கள் ராசிக்கு 1, 9, 11 ஆகிய இடங்களை பார்த்து சுபத்துவப்படுத்துகிறார். 

சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் குரு அமர்வதால், மகர ராசிக்கும் பொருளாதார மேன்மை கிடைக்கும், வேலையில் அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும், பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளுக்கு பலன்கள் கிடக்கும். 

புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டம் இது. வேலைக்காக  ஏப்ரல் மாதத்தில் இருந்தே முயற்சி செய்ய வேண்டும், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யும் மகர ராசிக்காரர்களுக்கு தசாபுத்திகள் ஆதரவு இருந்தால் நிச்சயம் வெளிநாட்டு வேலை உறுதி ஆகும். 

படிப்பு சார்ந்த விஷயங்களிலும் குரு பகவான் நன்மை செய்வார். 4ஆம் இடத்தில் இருந்த குருவால், அவமானம், படுதோல்வி, உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள், இனி இது போன்ற சிக்கல்கள் தீரும். 

பொருளாதாரத்தை பொறுத்தவரை, புதிய தொழில் தொடங்க நினைக்கும், மகர ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலகட்டம், ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து, நடக்கும் தசாபுத்திகளுக்கு ஏற்ப தொழில்களை தொடங்குவது நல்லது.

ஏற்கெனவே மகர ராசிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு பாத சனிக்கான பாதிப்பு  உள்ளது. இருப்பினும் குரு பார்வையால் பல நன்மைகள் நடைபெறும். பொருளாதாரத்தை பொறுத்தவரை மிக சிறப்பாக இருக்கும். 

குடும்பத்தை பொறுத்தவரை, திருமணம் ஆகாத மகர ராசிக்காரர்களுக்கு, திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் உறவில் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னைகள் தீரும். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி