தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus And Guru Transit: குரு, சுக்கிரன் இணைவால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! எந்தெந்த ராசிகளுக்கு பணவரவு

Venus and Guru Transit: குரு, சுக்கிரன் இணைவால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்! எந்தெந்த ராசிகளுக்கு பணவரவு

Mar 04, 2024, 03:15 PM IST

google News
ரிஷப ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். கஜலட்சுமி ராஜயோகத்தின் பலன் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மையும், யோகமும் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
ரிஷப ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். கஜலட்சுமி ராஜயோகத்தின் பலன் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மையும், யோகமும் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

ரிஷப ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். கஜலட்சுமி ராஜயோகத்தின் பலன் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மையும், யோகமும் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில், ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் வரும்போது இணைவு உருவாகும். அப்படி வரும் மே 1ஆம் தேதி குரு, ரிஷப ராசியில் இருப்பார். இதன் பிறகு மே 19ஆம் தேதி சுக்கிரனும் இந்த ராசிக்குள் நுழைவார். ரிஷப ராசியில் குருவும் சுக்கிரனும் இணைவது கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும்.

சமீபத்திய புகைப்படம்

2025 முதல் சனி இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.. இவர்களுக்கு அனைத்து வகையான யோகங்களும் கிடைக்கும்!

Dec 25, 2024 06:45 AM

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.25 எதிர்பார்த்தபடி உங்கள் கையில் பணம் சேருமா?

Dec 24, 2024 03:48 PM

இந்த யோகத்தால் நான்கு ராசிகளுக்கு யோகமும், பணவரவும் கிடைக்கும். அந்த வகை எந்தெந்த ராசிகள் கஜலட்சுமி ராஜோயத்தை பெறுகிறது என்பதை பார்க்கலாம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கூடும். பொருளாதார நிலை மேம்படும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் பணவரவு கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பணவரவு உண்டாகும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மனைவியிடமிருந்து நல்ல ஆதரவை பெறுவீர்கள்.

சிம்மம்: கஜலட்சுமி ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்கும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்: கஜலட்சுமி ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்த விஷயங்களில் இருந்து நல்ல வருமானத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி