Palani kumbabishekam: பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் - நவபாஷாண சிலை ஆய்வு!
Jan 09, 2023, 12:38 PM IST
பழனி மலை கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் மூலவர் நவபாஷாண முருகன் சிலை ஆய்வு செய்யப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் பழனி முருகன் திருக்கோயிலும் ஒன்று. அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த பழனி முருகன் திருக்கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் ஜனவரி 27ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணியின் போது பழனியின் மலை உச்சியில் உள்ள நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலையைப் பாதுகாக்க மற்றும் பலப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கிலியப்பன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த சிலையை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் கோயில் அர்த்தமண்டபத்துக்குள் இருந்த சிலையை இந்த குழுவினர் பார்வையிட்டனர்.
அதேசமயம் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கிலியப்பன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு, ஸ்தபதிகள், குருக்கள் என அனைவரும் நேற்று நள்ளிரவு மலைக் கோயிலில் வீற்றிருக்கும் நவபாஷாண மூலவர் முருகன் சிலை, கருவறை உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நள்ளிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பிறகு அதிகாலை வரை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வில், ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கிளியப்பன், பேரூர் மற்றும் சிறவை ஆதீனங்கள், அர்ச்சகர்கள், சித்த மருத்துவர்கள், ஸ்தபதிகள், இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
டாபிக்ஸ்