தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Elephant Dream Meaning: யானைகள் கனவில் வந்தால் இத்தனை அர்த்தங்கள் உள்ளதா?

Elephant Dream Meaning: யானைகள் கனவில் வந்தால் இத்தனை அர்த்தங்கள் உள்ளதா?

Aug 09, 2023, 08:21 PM IST

google News
கனவில் பல்வேறு விலங்கினங்கள் தோன்றுவது இயல்புதான். யானை உங்களது கனவில் வந்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னனென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கனவில் பல்வேறு விலங்கினங்கள் தோன்றுவது இயல்புதான். யானை உங்களது கனவில் வந்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னனென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கனவில் பல்வேறு விலங்கினங்கள் தோன்றுவது இயல்புதான். யானை உங்களது கனவில் வந்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னனென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தூங்கும்போது கனவு வருவதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் பற்றி சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை. ஒரு இரவில் நாம் தூங்கும்போது பல்வேறு கனவுகள் தோன்றலாம். கனவுகள் நாம் பார்த்த விஷயங்கள், பார்த்திராத விஷயங்கள் என பலவும் தோன்றும். அந்த வகையில் சில விலங்குகளும் கனவின்போது தோன்றுவது இயல்புதான்.

சமீபத்திய புகைப்படம்

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024 08:29 PM

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Dec 04, 2024 03:49 PM

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Dec 04, 2024 12:34 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 11:08 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.04 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Dec 04, 2024 10:45 AM

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Dec 04, 2024 10:25 AM

கனவுகளில் தோன்றும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இந்து மத சாஸ்திரத்தில் பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அதன்படி யானை உங்களது கனவில் வந்தால் என்னனென்ன பலன்கள் உள்ளது என்பதை காண்போம். யானை கனவில் வருவது நன்மைகளின் குறியீடு என கனவு சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

இந்து மதத்தில் யானை விநாயக கடவுளின் அம்சமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக திகழும் யானை நினைவாற்றலில் கூர்மையான விலங்கீனமாக உள்ளது. யானையின் பிரம்மிப்பான தோற்றம் சிலரை ஆச்சர்யப்பட வைக்கும்.

  • யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்கள் அனைத்து காரியங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
  • யானை மாலை போடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு பெரிய பதவி தேடி வரும் என்று அர்த்தம் என கூறப்படுகிறது.
  • அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படும் யானை நட்பாக இருப்பது போல கனவு வந்தால் நெருங்கமானவர்களிடம் நற்செய்தியை எதிர்பார்க்கலாம்.
  • விளை நிலங்களில் யானை உலா வருவதைப் போல கனவு வந்த உங்கள் செல்வம் அதிகரிக்கப்போகிறது எனவும், யானை தண்ணீரை கடப்பது போல் அல்லது நிற்பது போல கனவு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது . கவனக்குறைவு காரணமாக வரும் சிக்கலை முன்கூட்டியே சொல்லும் விதமாக அந்த கனவு அமைவதாக கூறப்படுகிறது.
  • கனவில் குட்டி யானை வந்தால் காரிய வெற்றி, செல்வ செழிப்பு உண்டாகபோவதாக அர்த்தம் என கூறப்படுகிறது
  • யானைகள் கூட்டமாக இருப்பதுபோல் கனவு வந்தால் பரம்பரை சொத்தில் பங்கு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிவிப்பதாகும்.
  • கோயில் அல்லது பொது இடத்தில் யானை மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் குடும்பத்திலும் தொழில்துறையிலும் வளர்ச்சி ஏற்படப்போகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை உயர்ந்த ஏற்றத்தை பெறலாம்
  • யானை உங்களை தாக்குவதைப் போல கனவு கண்டால் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் சங்கடங்கள் ஏற்படலாம்.
  • யானை பறப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் மிகப்பொய லட்சியத்தை அடையப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
  • யானையை பார்த்து அச்சப்படுவது போல கனவு வந்தால் மிகப்பெரிய பிரச்னை உங்களுக்கு வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது
  • மதம் பிடித்த யானையை கனவில் வந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை முன்கூட்டியே உணர்த்துவதாகும்.
  • யானை இறந்திருப்பதுபோல் கனவில் வந்தால் நீங்கள் புதிய மாற்றத்துக்கு தயாராகிறீர்கள் என்று பொருளாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி