தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஓ… காலண்டரை பார்க்காமல் ராகு காலம், எமகண்டம் பார்க்க எளிய வழியா?

ஓ… காலண்டரை பார்க்காமல் ராகு காலம், எமகண்டம் பார்க்க எளிய வழியா?

Priyadarshini R HT Tamil

Feb 13, 2023, 04:12 PM IST

google News
Astrology News: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் சுலபமான வழி என்னவென்று இங்கு காண்போம்.
Astrology News: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் சுலபமான வழி என்னவென்று இங்கு காண்போம்.

Astrology News: காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் சுலபமான வழி என்னவென்று இங்கு காண்போம்.

பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், எமகண்டம் பார்ப்பது பலரின் வழக்கமாக நமது நாட்டில் இருந்து வருகிறது. 

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும். அப்படி இல்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு.

அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். திருநாள் ந்தடியில் வெயிலில் புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?

இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள். முதலில் திங்கட்கிழமை காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள ஒன்றரை மணி நேரம் அடுத்தடுத்த நாட்களுக்குள்ள ராகுகாலமாக அமையும். 

திங்கள்:7.30-9.00; சனி:9.00-10.30; வெள்ளி: 10.30-12.00; புதன்:12.00-1.30; வியாழன்:1.30-3.00; செவ்வாய்: 3.00-4.30; ஞாயிறு: 4.30-6.00.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம். 

அடுத்தது, எமகண்டத்திற்கான வாக்கியம் என்னவென்று பார்ப்போம். விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் த்தியமும் வெளிப்படுத்தும்.

எமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் எமகண்டமாகும்.

வியாழன்: 6.00-7.30; புதன்: 7.30-9.00; செவ்வாய்: 9.00-10.30; திங்கள்: 10.30-12.00; ஞாயிறு: 12.00-1.30; சனி: 1.30- 3.00; வெள்ளி: 3.00-4.30. 

இரண்டே இரண்டு வாக்கியங்களை மனப்பாடம் செய்துகொண்டால், நீங்கள் ஒரு நடமாடும் காலண்டராக மாறி ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை கூறமுடியும். இனிமேல் ராகுகாலம், எமகண்டம் பார்ப்பது சுலபம்தானே!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி