Dream Shastra: மதிய நேர ஆழ்ந்த தூக்கத்தின் கனவு நனவாகுமா? அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கனவுகள் எவை? கனவு சாஸ்திர பலன்கள்
May 13, 2024, 04:16 PM IST
அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கனவுகள் எவை, கனவுகள் எந்த நேரத்திலும் நனவாகும் என்பது குறித்து கனவு சாஸ்திர பலன்கள் என்ன சொல்கிறது என்பத பார்க்கலாம். மதிய நேர ஆழ்ந்த தூக்கத்தின் கனவு நனவாகுமா என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கனவு அறிவியலின் படி, நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கண்ட கனவு நனவாகும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. நீங்கள் காணும் கனவு நிறைவேறும் நேரம் பற்றி கனவு சாஸ்திரத்தில் கூறப்படுவதை அறிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
கனவு சாஸ்திரத்தின் படி, ஒரு கனவு குறிப்பிட்ட நேரத்தில் காணப்பட்டால், அது நனவாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கனவு காண்பதற்கு எது நல்ல நேரம் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. சில சமயங்களில் மதியம் ஆழ்ந்த உறக்கத்தில் கூட, நிஜமாக நடப்பது போன்ற கனவுகள் வரலாம். கனவுகள் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கனவில் நாம் பார்க்கும் சில விஷயங்கள் சுபத்தை குறிப்பதாக இருக்கும்.
கனவில் வரும் அதிர்ஷ்டத்தின் சின்னங்கள்
உங்கள் கனவில் நீங்கள் சில விஷயங்களைக் கண்டால், அதிர்ஷ்டம் மிக விரைவில் உள்ளது என்பதை குறிப்பதாக உள்ளது. அந்த வகையில் கனவில் மழை தோன்றுவது அதிர்ஷ்டத்தின் வருகையாக பார்க்கப்படுகிறது.
உங்கள் கனவில் ஒரு மழையைக் கண்டால், உங்கள் விதிக்கு விரைவில் ஏதாவது நல்லது நடக்கப் போகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், கனவில் வெள்ளை சங்கு தென்பட்டால், அதுவும் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும்.
கனவில் பால் அல்லது மரத்தைக் கண்டால் என்ன அர்த்தம்
பழங்கள் நிறைந்த மரத்தை கனவை நீங்கள் கண்டால், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் கனவில் பால் தரிசனம் செய்தால் செல்வ வளம் பெருகும். மலர்கள் மற்றும் மழையை பார்ப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.
மதிய தூக்கத்தின் போது வரும் கனவுகள் நனவாகுமா?
சிலருக்கு மதிய நேரத்தில் ஆழந்த உரக்கத்தின்போது கனவுகள் வரும். ஆனால் கனவு சாஸ்திரங்களின்படி அது நனவாகாது என்று கூறப்படுகிறது. அதே போல் இரவு 10 மணி முதல் 12 மணி வரை வரும் கனவுகளும் எந்த பலனையும் தராது என்கிறது கனவு சாஸ்திரம்.
கனவுகள் எந்த நேரத்திலும் நனவாகும்
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை காணப்பட்ட கனவு நனவாகும் வாய்ப்பு அதிகம். அத்தகைய கனவு புத்தகம் போன்றது. எனவே அந்த நேரத்தில் நீங்கள் கனவு கண்டால், அது நனவாகும். 1 வருடத்துக்குள் அது நிறைவேற வாய்ப்புள்ளது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கனவுகள் நனவாக சிறந்த நேரம்
கனவு சாஸ்திரங்களின்படி, அதிகாலை 3 முதல் 5 மணி வரையிலான நேரம் பிரம்ம கணம் என கூறப்படுகிறது. கனவுகள் நனவாவதற்கு இதற்கு இடைப்பட்ட காலமே சிறந்த நேரம் எனவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் கனவு கண்டால், அது நனவாகும் வாய்ப்பு அதிகம்.
இந்தக் காலத்தில் கனவு கண்டால் 1 வருடம் முதல் 6 மாதம் வரை நிச்சயம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது சாஸ்திரம்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்