புத்தர் சிலை வைப்பது வீட்டில் சண்டை சச்சரவுகளை குறைக்குமா? வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?
Nov 21, 2024, 04:39 PM IST
வீட்டில் நீடிக்கும் சண்டை சச்சரவு, குடும்ப உறுப்பினர்கள் இடையே மனஸ்தாபம், அமைதியின்மை ஆகிய சூழல்கள் கடும் மன உளைச்சல்களை தருவதாக அமைகின்றது. இது போன்ற பிரச்னைகளால் வீட்டில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பற்றி விவரிக்கும் சாஸ்திரம் ஆக உள்ளது. ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் முறைகளை வேதம் சார்ந்து வாஸ்து விளக்குகின்றது.
சமீபத்திய புகைப்படம்
வீட்டில் நீடிக்கும் சண்டை சச்சரவு, குடும்ப உறுப்பினர்கள் இடையே மனஸ்தாபம், அமைதியின்மை ஆகிய சூழல்கள் கடும் மன உளைச்சல்களை தருவதாக அமைகின்றது. இது போன்ற பிரச்னைகளால் வீட்டில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஒருவரது வீட்டில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் நிறைந்து இருந்தால் கீழ்கண்ட வாஸ்து முறைமைகளை செய்வது பலன்களை தரும்:-
வீட்டின் வடகிழக்கு மூலை
வாஸ்து சாஸ்திரப்படி வடகிழக்கு திசையை எப்போதும் சுத்தமாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் வைத்து இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு மூலை சுத்தமாக இருந்தால், நேர்மறை ஆற்றல் ஓட்டம் இருக்கும்.
புத்தர் சிலை
வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்படுவதைக் குறைக்க, புத்தர் சிலையை வைத்திருங்கள். புத்தர் சிலையை வீட்டின் ஹால் மற்றும் பால்னியில் வைக்கலாம். புத்தரின் சிலையை வைத்திருப்பது வீட்டில் அமைதியைப் பேணும் என்பது நம்பிக்கை.
கல் உப்பின் பயன்பாடு
கல் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்ய முடியும் என்பது நம்பிக்கை ஆகும். வீட்டில் உள்ள அனைத்து மூலைகளிலும் கல் உப்பை சிறிய பாத்திரங்களில் வைப்பதன் மூலம் வீட்டில் அமைதி கூடும். மாதம் தோறும் இதனை மாற்ற வேண்டும்.
திசையை கவனியுங்கள்
சில சமயங்களில் வாஸ்து தோஷங்களால் வீட்டின் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே, வீட்டின் வடகிழக்கு மூலையில் கழிப்பறை கட்டக்கூடாது. தென்கிழக்கு திசையில் சமையலறை இருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்