தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’தனுசு ராசியை பிடிக்கும் அர்தாஷ்டம சனி! எதிலும் எச்சரிக்கை தேவை!’ 2025 சனி பெயர்ச்சி பலன்கள்!

’தனுசு ராசியை பிடிக்கும் அர்தாஷ்டம சனி! எதிலும் எச்சரிக்கை தேவை!’ 2025 சனி பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 05, 2024, 08:58 PM IST

google News
தனுசு ராசிக்கு 3ஆம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் சுக ஸ்தானம் எனப்படும் 4ஆம் வீட்டுக்கு பெயர உள்ளார். இதனால் உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தனுசு ராசிக்கு 3ஆம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் சுக ஸ்தானம் எனப்படும் 4ஆம் வீட்டுக்கு பெயர உள்ளார். இதனால் உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தனுசு ராசிக்கு 3ஆம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் சுக ஸ்தானம் எனப்படும் 4ஆம் வீட்டுக்கு பெயர உள்ளார். இதனால் உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

காலபுருஷனின் 9ஆம் வீடான தனுசு ராசியில் குரு பகவான் மூலத் திரிகோணம் அடைகிறார். மூலம், பூராடம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்கள் தனுசு ராசியில் அடக்கம். பெரிய மனிதர்கள் தொடர்பு, உயர்ந்த லட்சியங்கள் கொண்ட எண்ணம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். 

சமீபத்திய புகைப்படம்

சனியின் தாக்கம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்.. இவர்கள் எச்சரிக்கையா இருக்கணும்.. வேலை செய்யும் இடத்தில் கவனம்!

Nov 26, 2024 11:41 AM

மகாலட்சுமி ராஜ யோகம்: சந்திர செவ்வாய் சேர்க்கையால் ஜாக்பாட் அடிக்கப் போகும் அந்த 3 ராசிகள் யார் தெரியுமா?

Nov 26, 2024 11:17 AM

ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!

Nov 26, 2024 11:12 AM

சனி பெயச்சியால் ஜாக்பாட் .. இந்த மூன்று ராசிக்கு இனி கவலை வேண்டாம்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.. நல்ல காலம் ஆரம்பம்!

Nov 26, 2024 10:34 AM

குரு படாத பாடு படுத்த போகிறார்.. பணத்தை கட்டு கட்டாக எண்ணும் ராசிகள்.. அடியோடு வாழ்க்கை மாறப்போகுது

Nov 26, 2024 10:29 AM

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

சனி பகவானும் 4ஆம் இடமும்!

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். தனுசு ராசிக்கு 3ஆம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் சுக ஸ்தானம் எனப்படும் 4ஆம் வீட்டுக்கு பெயர உள்ளார். இதனால் உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மூச்சு, நுரையீரல், கண் பார்வை, அடிவயறு, வாயு சார்ந்த பிரச்னைகளில் கவனம் தேவை. சிலருக்கு தாயை பிரிந்து வேறு இடங்களுக்கு செல்லும் நிலை உண்டாகலாம். தாயாரின் உடல் நலனின் கவனம் தேவை. 

வீடு, மனை, வாகனத்தில் கவனம்!

வீடு, மனை, வாகனம் வாங்கும் விவகாரங்களில் மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. இந்த காலகட்டத்தில் பழைய வாகனங்களை வாங்க கூடாது, புதிய வாகனங்களையே வாங்க வேண்டும். வாகனங்களை இயக்கும் போது மிகவும் கவனம் அவசியம். ரியல் எஸ்டேட், தங்கும் விடுதி தொழிலில் சில தடைகள் வரும் என்பதால் பொறுமை அவசியம்.  கீழ்நிலை தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு வாழ்கையில் முன்னேற்றம் உண்டாகும். 

அஷ்டம சனி பாதிப்பில் பாதி அளவு பாதிப்பை இந்த அர்தாஷ்டம சனி காலத்தில் உண்டாகும். உறவு சார்ந்த பிரச்னைகள், விவாகரத்து உள்ளிட்ட சங்கடங்களில் இருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் நேரம் இது. 

பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவார்கள். சிலருக்கு நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கு, புகழ் மேலோங்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும். 

காவல்துறையில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள், செல்வாக்கு, மதிப்பு உள்ளிட்டவை கிடைக்கும். இதுநாள் வரை சந்தித்து வந்த சிக்கல்கள் மெதுவாக விலகும். 

சனி பகவானின் பார்வையும் பலன்களும்!

சனி பகவானின் 3ஆம் பார்வை 7ஆம் வீட்டில் பதிவதால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் கூடாது. 

சனி பகவானின் 7ஆம் பார்வை 10ஆம் வீட்டை பார்ப்பதால் தொழில் மற்றும் பணியில் உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் கிளம்பலாம். 

சனி பகவானின் 10ஆம் பார்வை உங்கள் ராசியை பார்ப்பதால் வேலை தொடர்பாக தவறான முடிவுகளை எடுப்பீர்கள்.   

பரிகாரமும் வழிபாடும் 

இந்த காலகட்டத்தில் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பதன் மூலமும், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கயில் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும். தெரு நாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை கொடுப்பது நன்மைகளை பெற்றுத் தரும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி