Palani: தைப்பொங்கல் கொண்டாட்டம்! பழனியில் குவிந்த பக்தர்கள் - 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Jan 15, 2024, 11:38 AM IST
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து கிரவல பாதையில் வருகை தந்து சுமார் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்.
தைப்பொங்கலை முன்னிட்டு அதிகாலையிலேயே பலரும் பொங்கல் வைத்து சூரிய பகவான வணங்கினர். இதையடுத்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
இதைத்தொடர்ந்து அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் முக்கிய விழா தைப்பூச நிகழ்வு 25ஆம் தேதி நடைபெறுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் ஏராளமானோர் தற்போதிலிருந்தே பாதயாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவல பாதையில் காவடிகள் எடுத்து பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் சுமார் 3 மணி நேரம் வரையிலும், இலவச தரிசனம், சிறப்பு கட்டண வழி தரிசனம் மூன்று மணி நேரம் வரையிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறையால் பழனி கோயிலில் 5 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்