Daily Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ இந்த நாளில் அசத்த போகும் ராசி எது? சொதப்ப போகும் ராசி எது? இன்றைய ராசிபலன்கள்!
Sep 15, 2024, 06:00 AM IST
Daily Horoscope: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லபலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இன்றைய தினம் மாற்றங்கள் ஏற்படலாம். இது உங்கள் உறவுகள், தொழில், நிதி நிலைமை, ஆரோக்கியம் ஆகியவை உடன் தொடர்பு உடையதாக இருக்கும். இந்த நாள் ஆனது சவால்களைச் சமாளிக்கவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் உதவும். பணம் சார்ந்த விவகாரங்களில் கவனமாக திட்டமிடுவது அவசியம். உங்கள் வரவு மற்றும் செலவுகளை மதிப்பாய்வு செய்து முடிவுகளை எடுப்பது அவசியம். எதிர்காலத்தில் முதலீடு செய்வதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பெரிய நிதி முடிவுகளை ஆராய்ச்சி செய்து எடுங்கள்
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் சிந்தித்து செயல்படுவது அவசியம். தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் சார்ந்த வாழ்கையிலும் கவனமாக இருங்கள். உங்கள் இலக்குகளை அடைவது பற்றி சிந்தியுங்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கும் நேரம் ஒதுக்குவது நல்லது. நிதி ரீதியாக விவேகமாகவும், உத்தியாகவும் இருக்க வேண்டிய நாள் இது. உங்கள் முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைத் திட்டமிட இது ஒரு நல்ல நாள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் வசீகரமும் நம்பிக்கையும் பிறரை ஈர்க்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும், இதில் கவனமாக முடிவுகளை எடுப்பது அவசியம். தொழில் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நாள் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியில் வளர்ச்சியும், முன்னேற்றமும் உண்டாகும். சேமிப்பில் கவனம் செலுத்தி செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த நாளில் சமநிலை உடன் செயல்படுவது அவசியம் உங்கள் உறவுகளுடன் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தொழிலில் சிந்தனையுடன் முன்னேறுங்கள் மற்றும் பணத்தை புத்திசாலித்தனமாக கையாளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளை வலுப்படுத்த இன்று ஒரு நல்ல நாள். அலுவலகத்தில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது தவறான புரிதலை தீர்க்க இது உதவும். உங்கள் பணியிடத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நிதி நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்கள் நிதிகளை நிர்வகிக்க அனுமதிக்காதீர்கள். கடந்த கால தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் காதலில் ஈடுபடுவர்கள் கவனமாக இருப்பது முக்கியம். அலுவலகத்திற்குள் காதலர்கள் உடன் பேசும் போது இடைவெளியை பின்பற்றுவது நல்லது. பேச்சில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடுகளில் இருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வாழ்கை துண உடனான உறவு நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். கடந்த கால உறவுகளைப் பற்றி சிந்திப்பீர்கள். தொழிலில் தெளிவாக திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். புதிய தொழில்களை செய்ய நினைப்பவர்கள் மிக கவனமாக முடிவுகளை எடுப்பது முக்கியம். உங்கள் செலவுகளைக் கவனித்து, உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். சிலருக்கு புதிய காதல் அமையும். இது உற்சாகமான உறவுக்கு வழிவகுக்கும். வேலையில் வரும் புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்தவும், உங்கள் தகுதியை நிரூபிக்கவும் இன்று ஒரு நல்ல நாள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். திருமணம் ஆகாத தனுசு ராசிக்காரர்கள் புதிய வாழ்கைத் துணையை சந்திக்கலாம். ஆக்கப்பூர்வமான தன்மையும் தலைமைத்துவ குணமும் முக்கியமான வெற்றிகளைக் கொண்டு வரும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமுடன் செயல்படவும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் இந்த நாளில் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடுங்கள். தொழில் வாழ்க்கையில் சமநிலையான அணுகுமுறையை பின்பற்றுங்கள். சக ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி இலக்குகளை அடையவும். ஆவேசமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு தொழில் திறன் அதிகரிக்கும். சூழ்நிலைகளை சாதகமாக கையாள்வீர்கள். சக ஊழியர்களுடன் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். பணியிடங்களில் சீனியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப உறவுகள் மேம்படும். காதல் வாழ்கை மகிழ்ச்சி ஆக இருக்கும். அன்புக்குரியவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். நம்பிக்கையும் உறவுகளும் வலுவடையும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் உறவுகள் உடனான உரையாடல்களில் கவனமாக இருப்பது முக்கியம். உங்கள் அன்புக்குரியவர்களின் கவலைகளை புறக்கணிக்காதீர்கள். உறவுகளில் பொறுமையை கடைபிடியுங்கள். நிதி விஷயங்களில் விழிப்பாக செயல்படுங்கள். சட்ட விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். தொழில் ஈடுபாடுகள் உங்களை பிஸியாக வைத்திருக்கும். வியாபார விஷயங்களில் தெளிவைக் கடைப்பிடிக்கவும்.