Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை’ வீடு, மனை, கட்டிடங்கள் என சொத்து வாங்கி குவிக்கும் ராசிகள் எது?-money luck and real estate discover which zodiac signs from aries to pisces build wealth - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை’ வீடு, மனை, கட்டிடங்கள் என சொத்து வாங்கி குவிக்கும் ராசிகள் எது?

Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை’ வீடு, மனை, கட்டிடங்கள் என சொத்து வாங்கி குவிக்கும் ராசிகள் எது?

Kathiravan V HT Tamil
Sep 14, 2024 05:39 PM IST

காலி நிலங்களுக்கு புதன் பகவானும், கட்டிடங்கள் உடன் கூடிய நிலங்களுக்கு செவ்வாய் பகவானும் காரகத்துவம் செய்கின்றனர். பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு செவ்வாய் உடன் கூடிய ராகு அல்லது 8ஆம் அதிபதியோ அல்லது புதன் உடன் 8ஆம் அதிபதியோ சேரும் போது ஏற்படும்.

Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை’ வீடு, மனை, கட்டிடங்கள் என சொத்து வாங்கி குவிக்கும் ராசிகள் எது?
Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை’ வீடு, மனை, கட்டிடங்கள் என சொத்து வாங்கி குவிக்கும் ராசிகள் எது?

நிலமும் கிரகங்களின் காரகத்துவமும் 

காலி நிலங்களுக்கு புதன் பகவானும், கட்டிடங்கள் உடன் கூடிய நிலங்களுக்கு செவ்வாய் பகவானும் காரகத்துவம் செய்கின்றனர். பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு செவ்வாய் உடன் கூடிய ராகு அல்லது 8ஆம் அதிபதியோ அல்லது புதன் உடன் 8ஆம் அதிபதியோ சேரும் போது ஏற்படும். 

பெரும் சொத்து சேர்க்கும் யோகம் யாருக்கு?

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரனோடு சேர்ந்தோ அல்லது இரண்டாம் அதிபதியோடு சேர்ந்தோ அல்லது இரண்டாம் இடத்தில் இருந்தாலோ அல்லது இரண்டாம் இடத்தை பார்த்தாலோ அல்லது இரண்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் இருந்தாலோ சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருந்தாலோ நீங்கள் சொத்துக்கள் வாங்கிய பின்னர் பெரும் வளர்ச்சி ஏற்படும். 

அசுர வளர்ச்சி தரும் 12ஆம் அதிபதி 

உங்க ஜாதகத்தில் 12 ஆம் அதிபதி கேந்திரங்களிலேயோ அல்லது திரிகோணங்களிலேயோ இருந்து ஆட்சி உச்சம் பெற்றாலோ அல்லது 12ஆம் அதிபதியின் வீட்டையே பார்த்தால் சொத்துக்கள் வாங்கிய பின்பு அசுர வளர்ச்சி ஏற்படும். எட்டாம் அதிபதி 12-இல் இருந்தாலும் அல்லது 12 ஆம் அதிபதியோடு சேர்ந்தாலும், 8 மற்றும் 12 ஆம் இடத்திற்கு உரியவர்கள் கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருந்தாலும் உங்களுக்கு சொத்துக்களால் வளர்ச்சி உண்டு.இந்த அமைப்பை கொண்டவர்களுக்கு பிரம்மாண்ட கட்டிடம் மற்றும் வீடுகளை கட்டுவதற்கு பெரும் ஆசை இருக்கும். 

சொத்து சேர்க்கையை தரும் 4 மற்றும் 8ஆம் அதிபதிகள் 

நான்காம் மற்றும் எட்டாம் அதிபதி தொடர்பு இல்லாமல் பிரம்மாண்ட சொத்துக்களை வாங்கவே முடியாது.   உங்க ஜாதகத்தில் 5, 9, 11, 2 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும், 2, 5, 9, 11 ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தாலும், உங்கள் நாலாம் அதிபதி ஆனவர் 2, 5, 9, 11ஆம் இடங்களில் இருந்தாலும் சொத்துக்களால் உங்களுக்கு வளர்ச்சி, நீங்கள் வீடு கட்டிய பின்பு வெற்றி உள்ளிட்டவை உண்டாகும். 

வீடு கட்ட எந்த நேரம் நல்லது 

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் மீது கோச்சாரத்தில் குரு போகும்போது அல்லது செவ்வாய், சுக்கிரனையோ கோச்சாரத்தில் குரு பார்க்கும்போது வீடு கட்டும் பணிகளை தொடங்குவது நன்மைகளை தரும். அதே போல 4ஆம் அதிபதியை குரு பார்க்கும் நேரத்திலும் அல்லது சூரியனை குரு பார்த்தாலும் வீட்டு வேலையை தொடங்குவது நல்லது. 

வீடு கட்ட ஏங்கி கொண்டு இருப்பவர்கள் சிறுவாபுரி முருகன் கோயில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசுவாமி கோயில், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக சுவாமி கோயில்களில் வழிபாடு நடத்த வீடு கட்டும் யோகம் கைக்கூடும்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner