மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.14 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
Nov 14, 2024, 05:30 AM IST
மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 14) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 14 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசி உள்ளிட்ட 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மனதளவில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். மற்றவர்களின் குறைகளை பெரிது படுத்துவதை தவிர்க்கவும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி முடிவு பெறும். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்
ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான சில பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
மிதுனம்
பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய செய்திகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் குறையும்.
கடகம்
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். ஏற்றம் இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம்
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த சில உதவிகள் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதலில் விவேகம் வேண்டும். உறவினர்களின் வருகை ஏற்படும்.
கன்னி
சமூகப் பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் மனஅழுத்தம் அதிகரிக்கும். உயர் பதவியுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.. அக்கம்-பக்கம் இருப்பவரிடம் அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்