ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பலன்கள்!
Jun 20, 2022, 01:12 AM IST
கோயம்புத்தூர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் சிறப்புகள் பற்றிக் காண்போம்.
கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே நவாவூர் பிரிவு என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் குறித்து இங்கே காணலாம்.
சமீபத்திய புகைப்படம்
இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் வராஹ முகம், நரசிம்ம முகம், வானர முகம், கருட முகம் மற்றும் ஹய முகம் என ஐந்து திருமுகங்களைக் கொண்டுள்ளார்.
இந்த ஐந்து திருமுகங்களுடன் கூடிய மூர்த்திகள் தனித்தனியே உண்டு என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்த மூர்த்திகளை ஓர் உருவில் நாம் தரிசிப்பது தான் இந்தக் கோலத்தின் சிறப்பாகும்.
வெவ்வேறு பலன்களுக்காக வணங்கப்படும் மூர்த்திகளின் ஓருவாரகத் திகழ்கிறார் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர். பக்தர்கள் தங்களுடைய சிக்கல்கள், சங்கடங்கள் அனைத்தையும் இங்கு வந்து அனுமன் சன்னதி முன்பு சமர்ப்பித்து விட்டுச் செல்கின்றனர்.
அதற்கான தீர்வுகளை அடுத்தடுத்து ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் தந்து அருள்வதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அனுமனைத் தரிசிக்கக் கோவை மாவட்டம் வடவள்ளி அருகில் நவாவூர் பிரிவில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் தரிசிக்கலாம்.
இவரை வழிபட்டால் இதுவரை பலமுறை தேடி அலைந்தும் வராத புதிய மாற்றங்கள், புதிய வளர்ச்சிகள் உங்களைத் தேடிவரும் இது நிச்சயம் என்பது ஐதீகமாக உள்ளது.