வக்ரம் பெற்றார் செவ்வாய்! துலாம் முதல் மீனம் வரை வாட்டி வதங்க போகும் ராசிகள்!
Dec 07, 2024, 09:45 PM IST
நவ கிரகங்களின் தளபதி எனப்படும் செவ்வாய் பகவான் கடகம் ராசியில் டிசம்பர் 7ஆம் தேதியான இன்றைய தினம் காலை 05:01 மணிக்கு தொடங்கி வக்ர நிலை பெற்று உள்ளார். அடுத்து வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி வரை செவ்வாய் பகவான் வக்ர நிலையில் இருப்பார்.
நவ கிரகங்களின் தளபதி எனப்படும் செவ்வாய் பகவான் கடகம் ராசியில் டிசம்பர் 7ஆம் தேதியான இன்றைய தினம் காலை 05:01 மணிக்கு தொடங்கி வக்ர நிலை பெற்று உள்ளார். அடுத்து வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி வரை செவ்வாய் பகவான் வக்ர நிலையில் இருப்பார். செவ்வாய் பகவானின் இந்த நிலை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு சுபமான மற்றும் அசுபமான விளைவை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தொழில் தொடர்பான திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் இது. பணி வாழ்க்கையில் தடை, தாமதம், பின்னடைவுகள் ஏற்படலாம். முடிக்கப்படாத திட்டங்கள் மீது கவனம் தேவை. கடந்த காலத்தில் நீங்கள் பயன்படுத்திய உத்திகள் பலன் கொடுக்கும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வாழ்கையில் வளர்ச்சி காண வழிவகை செய்யும். தொலைநோக்கு சிந்தனை உடன் இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்களால் விரக்தி உண்டாகும். உண்டாகும் மாற்றங்களில் கவனமாக இருங்கள். நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். செவ்வாய் வக்ர நிவர்த்தியாகும் காலம் புதிய தொடக்கத்திற்கு வழி வகை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு தீர்க்கப்படாத சிக்கல்கள் தீரும். பணம் சார்ந்த விவகாரங்களில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். விழிப்புணர்வுடன் இருந்து காரியம் சாதிக்க வேண்டிய காலம். உறவுகள் தொடர்பான விவகாரங்களில் கவனம் தேவை.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை செவ்வாய் வக்ர பெயர்ச்சி உண்டாக்கும். தீர்க்கப்படாத பிரச்னைகள் முடிவுக்கு வரும். சிக்கல்களை சவால் மனப்பான்மையுடன் தீர்ப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகள் உடனான உறவில் கவனம் தேவை. குடும்ப உறவுகளிடம் கவனமாக இருங்கள். பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் ஓய்வு அவசியம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உடல் சோர்வால் அன்றாட பணிகள் பாதிக்கப்படும். முன்னேற்றம் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு பொழுதுபோக்குகளில் ஆர்வம் கூடும். புதுமை சார்ந்த நடவடிக்கைகளில் ஆர்வம் கூடும். காதல் விவகாரங்களில் சில பிரச்னைகள் வரலாம். கொண்டுள்ள இலக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். .
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்