Bedroom Vastu: புதுமணத் தம்பதிகளின் பெட்ரூமை அலங்கரிப்பது எப்படி? - வாஸ்து சொல்லும் குறிப்புகள் இதோ..!
Feb 04, 2024, 08:37 PM IST
புதுமணத் தம்பதிகளின் பெட்ரூம் எவ்வாறு இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக முக்கியமானது. சந்தோஷமாக வாழவே எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வதுண்டு. ஆனால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதேபோல கடினமானதும் அல்ல. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பிரச்சனைக்கு வழியே இல்லை.
சமீபத்திய புகைப்படம்
இது ஒருபுறம் இருந்தாலும், திருமணமான தம்பதிகளின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்க வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க, தம்பதிகளின் அறையை எவ்வாறு அலங்கரிக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. புதுமணத் தம்பதிகளுக்கு வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
புதிதாக திருமணமான தம்பதிகளின் அறை தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தென் மேற்கு பகுதியில் பெட் ரூம் இருந்தால் ஆணின் சக்தியை சமநிலைப்படுத்தும் மற்றும் பெண்ணின் பக்கம் சாய்க்கிறது.
வாஸ்து படி, புதிதாக திருமணமான தம்பதியரின் அறையில் ஒரு அகல் விளக்கு வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய நவநாகரீக காலத்தில் அகல் விளக்கு பயன்படுத்த முடியாவிட்டாலும், சிறிய மின்விளக்கை அறையில் பயன்படுத்தலாம். பெட் ரூமில் ஒரு ஜன்னல் மட்டும் இருக்க வேண்டும். ஏனெனில் இது தம்பதியினருக்கு இடையிலான மன அழுத்தத்தை குறைக்கிறது.
புதிதாக திருமணமானவர்கள் உறங்கும் திசையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. தூங்கும் போது உங்கள் தலை தெற்கு நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் இருக்க வேண்டும். இந்த திசையில் நீங்கள் படுத்தால் இனிமையான தூக்கத்தைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல் படுக்கையில் இனிமையை அனுபவிக்கலாம்.
வாஸ்து குறிப்புகள் படி, பெட் ரூமில் கண்ணாடி வைப்பது நல்லதாகவும் சரியானதாகவும் கருதப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே விரிசல் குறைவதுடன் இருவருக்கும் இடையே அன்பும் வளருமாம்.
பிரதான படுக்கை அறையில் வண்ணமயமான காதல் பறவைகளின் படத்தை வைக்கவும், அது ஒருவருக்கொருவர் அன்பை உணர வைக்குமாம். எதிர்மறையான படங்களை வைக்க வேண்டாம். படுக்கை அறையில் மென்மையான வண்ண விளக்குகள் அமைப்பத்தால், அது உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உதவும்.
திருமணமான தம்பதியர்களுக்கு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமானது மங்களகரமானது என்று கூறப்படுகிறது. போர்வைகள், திரைச்சீலைகள் போன்றவற்றின் நிறமாக இந்த கலரையே பயன்படுத்தலாம். எலெக்ட்ரானிக் சாதனத்தை படுக்கையறையில் வைக்கக் கூடாது என்று வாஸ்து குறிப்புகள் கூறுகின்றது. ஏனெனில் அது வாஸ்து படி நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. மேலும் அது உங்களுக்கும் உங்கள் இணையருக்குமான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.
வாஸ்து குறிப்புகள் படி, பெட் ரூமில் கண்ணாடி வைப்பது நல்லதாகவும் சரியானதாகவும் கருதப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே விரிசல் குறைவதுடன் இருவருக்கும் இடையே அன்பும் வளருமாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்