2024 Guru Peyarchi: 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷபம் ராசிக்குள் நுழையும் குரு..சோதனை யாருக்கு?
Jan 08, 2024, 06:04 PM IST
2024 ஆம் ஆண்டு குரு பெயா்ச்சிக்கு பிறகு எந்தெந்த ராசியினருக்கு என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி பார்ப்போம்.
குரு பகவான் மங்கள கிரகமாக கருதப்படுவதால் யாருக்கும் பொிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தமாட்டார். இருந்த போதிலும் குரு பகவானின் பெயர்ச்சியால் சில ராசிகள் கஷ்டமான சூழ்நிலையை சந்திக்கப் போகின்றனர். அந்தவகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்குள் நுழைகிறாா். இந்த குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த ராசிகள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
ரிஷபம்: ரிஷபம் ராசியினருக்கு இந்தாண்டு குரு பெயா்ச்சி பல ஏற்ற தாழ்வுகளைத் தருவதாக அமையப்போகிறது. இந்த காலக்கட்டத்தில் உடல்நிலை பிரச்னைகள் ஏற்படலாம். குருவின் இந்த சஞ்சாரம் காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உங்களுக்கு ஏற்படலாம். ரிஷபத்தின் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கையில் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். தொழிலிலும் சில ஏற்ற தாழ்வுகள் உண்டாகும்.
கன்னி: இந்தாண்டு குரு பெயர்ச்சி பல விஷயங்களில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையாக இருக்கும். சில சவால்களை சந்திக்க நேரிடலாம். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் எந்த சுப காரியங்களையும் செய்யவேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குரு பெயா்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்கள் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
துலாம்: துலாம் ராசியின் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார் குரு. இதனால், சகோதரர்களுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களுடனான உங்கள் சச்சரவுகள் அதிகரிக்கலாம். கடன் சுமை அதிகரிக்கும். இந்த குரு பெயா்ச்சியால் நிதி சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்