தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Rasi: ’மகரத்தில் உச்சம் தொடும் செவ்வாய்!’ அலறி ஓடப்போகும் எதிரிகள்! முழு பலன்கள் இதோ!

Magaram Rasi: ’மகரத்தில் உச்சம் தொடும் செவ்வாய்!’ அலறி ஓடப்போகும் எதிரிகள்! முழு பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil

Feb 04, 2024, 08:33 PM IST

google News
”செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும்”
”செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும்”

”செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும்”

மகர ராசியில் செவ்வாய் பகவான் வரும் பிப்ரவரி 5ஆம் தேதியான நாளை உச்சம் பெறுகிறார்.  செவ்வாய் பகவான் உச்சம் பெறும் வேளையில், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் தள்ளிப்போடுவதும், செய்யக்கூடாததை அவசர கதியில் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். 

சமீபத்திய புகைப்படம்

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Dec 22, 2024 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 22, 2024 10:58 AM

யாருக்கெல்லாம் முத்து அணிந்தால் செல்வம் பெருகும்.. யார் அணிய கூடாது தெரியுமா.. முத்து வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க!

Dec 22, 2024 10:35 AM

யாருங்க இந்த பாபா வங்கா.. என்னது 2025 ல் பொன்னாக ஜொலிக்க காத்திருக்கும் 5 ராசிகளை கணித்திருக்கிறாரா!

Dec 22, 2024 10:08 AM

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

நேர்மை, நன்நெறி, ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டிய காலகட்டமாக இது உள்ளது. எதற்கும் அஞ்சாமல் மகர ராசியினர் செயல்படும்போது எதிரிகள் மகரராசியினரை கொண்டு அஞ்சும் நிலை ஏற்படும். உங்களை கண்டு ஏளனம் செய்த நபர்கள், உறவினர்கள், நண்பர்களின் கருத்துகளை எல்லாம் முறியெடுத்து முன்னேறும் நிலையையும் இந்த செவ்வாய் உச்சம் ஏற்படுத்தி தரும். 

ஏற்கெனவே மகர ராசிக்காரர்கள் பாதசனி பாதிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய் உங்கள் ராசியிலேயே உச்சம் பெறுவது, மிகப்பெரிய பலத்தை உங்களுக்கு நிலம் சார்ந்த விஷயங்களில் தரும். 

நிலம் வாங்குவதில் இருந்த தடை, வீடு வாங்குவதில் இருந்த தடை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவி உறவில் இணக்கம் உண்டாகும். முயற்சி தடைகள் நீங்குவதற்கு ஏற்க காலமாக இது இருக்கும். 

செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும். 

இல்லற வாழ்கையை வலிமையாக கட்டமைத்துக் கொள்வதற்கான தைரியத்தை செவ்வாய் பகவான் தருவார். 

அதே சமயத்தில், கோபமாக பேசியோ, வளைந்து கொடுக்காமலோ இருக்க கூடாது. இதனால் வர வேண்டிய நன்மைகள் வராமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

பெண்களுக்கு அறிவும், நுட்பமும் ஆழப்பொதித்திருக்க கூடிய அனுபவும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.  

உடனடியாக பணம் வரும் என சொல்லப்படும் சூதாட்டங்கள் உள்ளிட்ட செயல்களில் மகர ராசிக்காரர்கள் ஈடுபட வேண்டாம்.  பிப்ரவரி 15ஆம் தேதிக்கு மேல் அரசு சார்ந்த விஷயங்களில் முயற்சி செய்தால் மிகப்பெரிய தனலாபம் வர வாய்ப்பு உள்ளது. கல்வி பயிலும் மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெற்றக்கூடிய சூழலை இந்த கிரகநிலைகள் தருகிறது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி