வீட்டில் பல்லி இருப்பது நல்லதா.. எந்த திசையில் சத்தமிட்டால் வில்லங்கம்.. நம் உடலில் பல்லி விழுந்தால் ஏற்படும் பலன்கள்
Nov 07, 2024, 02:44 PM IST
கர்நாடக மாநிலத்தில் பல்லியை, சிலர் கடவுளாக வழிபடுகின்றனர். மேலும் பல்லி, மகாலட்சுமியின் அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். எந்த திசையில் சப்தமிட்டால் என்ன பலன் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு உயிரினம் பல்லி. இது ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இது போல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. அவ்வகையில் இயற்கையின் சூட்சுமத்தை உணரக்கூடிய தன்மை பல்லிக்கு உண்டு எனவேதான் பல்லியின் சத்தத்திற்கும் அது மேலே விழுவதால் ஏற்படும் பலன்களுக்கும் அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
சமீபத்திய புகைப்படம்
ஜோதிட ரீதியாக பல்லி நம் வீட்டில் ஊர்வது, நம் வீட்டில் நேர்மறை சக்தி நிறைந்திருப்பதை மறைமுகமாக காட்டுகிறது என்கின்றனர், நிபுணர்கள்.
அதேபோல் நாம் குழப்பமான சூழலில் என்ன நடக்குமோ என்று ஒரு விசயத்தை நினைக்கும்போதும். நல்ல விசயங்கள் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்திலும் பல்லி எனப்படும் கவுளி சத்தமிட்டால் அந்த விசயம் நல்ல படியாக நடக்கும் எனவும் இந்து மரபில் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பல்லியை, சிலர் கடவுளாக வழிபடுகின்றனர். மேலும் பல்லி, மகாலட்சுமியின் அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். எந்த திசையில் சப்தமிட்டால் என்ன பலன் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
பல்லி கிழக்கு நோக்கி இருந்த படி சப்தம் எழுப்பினால் அசுப செய்தி வரக்கூடும். அது நம் வீட்டிற்கு நல்லதல்ல. அதே சமயம் பல்லி மேற்கு பக்கம் நோக்கி இருக்கும் போது சத்தம் எழுப்பினால் வீட்டிற்கு வரக்கூடிய கெடுதல்களை எச்சரிக்கப்படுவதாகும். தெற்கு திசையாக இருப்பின் எதிர்பாராத தோல்வியும் எதிர்பாராத விரையமும் உண்டாகும். அதுவே வடக்கு திசையில் இருந்து ஒலி எழுப்புமாயின் நம் வீட்டில் எதிர்பாராத சுப செய்தி வரும் என்பது நம்பிக்கை. பல்லி விழுவதால் ஏற்படக்கூடிய பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம்
பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள்
பல்லி தலையில் விழுந்தால் கெட்ட நேரத்தை எச்சரிப்பதற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது. நெற்றியின் மீது பல்லி விழுந்தால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது அதுவே தலைமுடியில் விழுந்தால் நன்மை நிகழும். நமது உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் முழுவதும் மகிழ்ச்சியாய் அமையும். அதுவே வலது பக்கத்தை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது
பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
பல்லி விழுந்ததும் செய்ய வேண்டியது உங்களுடைய கை, கால், வாய் எல்லாவற்றையும் தூய்மையாக கழுவ வேண்டும். நம் உடலின் எந்த பாகத்தின் மீது பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுவது நல்லது. குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று கடவுளை மனதார வேண்டி வர வேண்டும். கோயிலுக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டிலேயே கூட விளக்கேற்றி கடவுளை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்து விடக்கூடாது என பிரார்த்தனை செய்ய வேண்டும். சிலர் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்குவார்கள். இந்த பல்லிகளை வணங்கினால் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.