தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஜனவரியில் தனுசு ராசியில் நுழையும் புதன்! அடிக்கும் ஜாக்பாட்! கதறும் ராசிகள்! 12 ராசிகளுக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்!

ஜனவரியில் தனுசு ராசியில் நுழையும் புதன்! அடிக்கும் ஜாக்பாட்! கதறும் ராசிகள்! 12 ராசிகளுக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 28, 2024, 08:57 PM IST

google News
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 4, 2025 அன்று, புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வார். தனுசு ராசியில் புதன் நுழைவது 12 ராசிகளையும் பாதிக்கும். தனுசு ராசியில் புதன் நுழைவதால் 12 ராசிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 4, 2025 அன்று, புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வார். தனுசு ராசியில் புதன் நுழைவது 12 ராசிகளையும் பாதிக்கும். தனுசு ராசியில் புதன் நுழைவதால் 12 ராசிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 4, 2025 அன்று, புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வார். தனுசு ராசியில் புதன் நுழைவது 12 ராசிகளையும் பாதிக்கும். தனுசு ராசியில் புதன் நுழைவதால் 12 ராசிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம், அறிவுக்கூர்மை ஆகிய பண்புகளுக்கு உரிய கிரகம் ஆக புதன் உள்ளது. நவக்கிரகங்களின் இளவரசன் என புதனை கூறுகிறார்கள். ஒருவரது ஜாதகத்தில் புதன் பகவான் வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகர் கல்வி, வியாபாரம், நுண்ணறிவில் சிறந்து விளங்குவார். ஆனால் வலு குறைந்து இருந்தால் அவருக்கு அசுப பலன்கள் உண்டாகும். 

சமீபத்திய புகைப்படம்

'தடைகளை தாண்டலாம்.. எச்சரிக்கை முக்கியம்.. விடா முயற்சி கைகொடுக்கும்’ மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 29, 2024 05:00 AM

மகரத்தில் நுழையும் சுக்கிரன்! திருமண யோகம் கைக்கூடும் 6 ராசிகள்! இனி மஜாதான்!

Nov 28, 2024 07:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.29 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன்கள் இதோ!

Nov 28, 2024 04:23 PM

வெறிபிடித்து வரும் செவ்வாய்.. அள்ளி அள்ளி சுவைக்கும் ராசிகள்.. இனி பொட்டி பொட்டியாக வரும்!

Nov 28, 2024 04:06 PM

உதயத்தில் போட்டு சாத்த போகும் புதன்.. பணத்தில் பிச்சுகிட்டு பறக்க போகும் ராசிகள்.. இனி உச்சகட்ட சந்தோஷம் வரும்

Nov 28, 2024 04:02 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..யாருக்கு லாபமான நாள்?..நாளை நவ.29 ராசிபலன்கள் இதோ..!

Nov 28, 2024 04:00 PM

வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அன்று புதன் பகவன் ஆனவர் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். 

ஜோதிடர் பண்டிட் நரேந்திர உபாத்யாய் கருத்துப்படி, தனுசு ராசியில் புதன் நுழைவதால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுப்பெறும். பணியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். சிலர் குடும்பத்தை விட்ட பிரிய நேரிடலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். பணியிடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் சார்ந்த பிரச்னைகள் தீர்க்கப்படும்.

கடகம் 

கடகம் ராசிக்காரர்களுக்கு நரம்புகள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பெரியோர்கள் ஆசி கிடைக்கும். அறிவுத்திறன் மேம்படும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகள் கீழ்படிந்து நடப்பார்கள். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். நிதி மற்றும் பொருளாதார மாணவர்கள் சிறந்து விளங்குவர்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நிலம், கட்டிடம், வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் சில ஆன்மீக வழிபாடுகள் நடைபெறும். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வியாபாரம் பெருகும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணக்கமாக இருப்பீர்கள். தொழில் அனுபவம் கூடும். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுகு பணவரவு அதிகரிக்கும். பேச்சாற்றலால் பிறரை கவர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் வெற்றிகள் கூடும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை உடனான நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பழைய முதலீடுகள் மூலம் செல்வம் சேரும். 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும். சிலருக்கு கடன் சுமை அதிகரிக்கலாம். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

கும்பம் 

கும்பம் ராசிக்காரர்களுக்கு பண பிரச்னைகள் தீரும். சிலர் புதிய தொழில் தொடங்குவது குறித்து சிந்திப்பீர்கள். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

அடுத்த செய்தி