விருச்சிகத்தில் வக்ரம் பெறும் புதன்! ’மேஷம் முதல் கன்னி வரை!’ புதன் வக்ர பெயர்ச்சி பலன்கள்!
Nov 08, 2024, 08:10 PM IST
நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் நவம்பர் 27 ஆம் தேதி விருச்சிகம் ராசியில் வக்ரம் பெறுகிறார்.
Budhan Peyarchi: ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம், அறிவுக்கூர்மை, நட்பு ஆகியவற்றின் காரகத்துவம் நிறைந்த கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் நவம்பர் 27 ஆம் தேதி விருச்சிகம் ராசியில் வக்ரம் பெறுகிறார்.
புதன் பகவான் வக்ரம் பெறும் நிலையில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கான பலன்களை தற்போது அறிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்சி காரணாமாக மனதில் குழப்பம் உண்டாகும். செயல்களில் நம்பிக்கை குறைவு ஏற்படும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். லாப வாய்ப்புகள் அமையும். வியாபாரம், தொழில், பணியிடங்களில் அதிக உழைப்பை போட வேண்டி இருக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரம் காரணமாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும் பேச்சில் கவனமும், நிதானமும் தேவைப்படும் காலம் இது. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும், அதே சமயம் இடமாற்றம் உண்டாகலாம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரம் காரணமாக மனதில் கவலைகள் வந்து நீங்கும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனச்சிதறல்கள் இல்லாமல் கவனமுடன் படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசாங்க விவகாரங்களில் அனுகூலம் கிடைக்கும். பணியிடங்களில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி காரணமாக தன்னம்பிக்கை குறைவு உண்டாகும். மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். பேச்சில் இனிமை இருக்கும். இறுப்பினும் பேச்சில் நிதானம் காப்பது நல்லது. சிலருக்கு பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரம் அடைவதால் மனதில் குழப்பம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். பணியிடங்களில் அதிக உழைப்பு போட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரம் பெறுவதால் மனதில் கவலைகளும் எதிர்மறை எண்ணமும் உண்டாடகும். பொறுமையாக இருங்கள். அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எடுக்கும் செயல்களில் கவனமாக ஈடுபடுவது நல்லது. கல்வி மற்றும் அறிவு சார்ந்த பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும். பணியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.