Bogar Jayanthi 2023: பழனியில் வெகு விமரிசையாக நடைபெற்ற போகர் ஜெயந்தி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
May 18, 2023, 03:49 PM IST
பழனி மலை கோயிலில் வைத்து போகர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பச்சை மரகத லிங்கத்துக்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோயில் மலை மீது அமைந்திருக்கும் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கியவர் சித்தர் போகர். போகரின் ஜீவசமாதி பழனி மலை கோயிலின் வெளி பிரகாரத்தில் அமைந்துள்ளது.
சமீபத்திய புகைப்படம்
பழனி முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சித்தர் போகரையும் தவறாமல் வணங்கி விட்டு செல்கின்றனர். போகர் ஜீவசமாதி அடைந்த இடத்தை அவரது சீடரான சித்தர் புலிப்பாணியின் வாரிசுகள் இன்று வரையில் பராமரித்து வருகின்றனர்.
சித்தர் போகரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மலை மீது உள்ள போகரின் ஜீவசமாதியில் வைத்து விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து சித்தர் போகர் மற்றும் புலிபாணியால் வணங்கப்பட்டு வந்த பழமையான பச்சை மரகத லிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பழ வகைகள் உட்பட 14 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதினம் ஸ்ரீமத் போகர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக இந்த போகர் விழாவில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து பாலகும்ப குருமுணி ஆதீனம் தலைமையில் ஆண்கள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஆன்மிக குழு பழனி மலைக்கோயிலுக்கு வருகை புரிந்தனர். அந்த குழு சார்பில் உலக அமைதி வேண்டி புலிபாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகமும் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஐப்பான் ஆன்மிக குழுவினர் இன்று நடைபெற்ற போகர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்