’மேஷம் முதல் கன்னி வரை!’ அதிர்ஷ்டமும் யோகமும் சேர அணிய வேண்டிய ராசிக்கற்கள் இதோ!
Oct 11, 2024, 04:47 PM IST
நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை பார்த்து ஒருவரின் எதிர்காலத்தை எளிதாகக் கணிக்க முடியும். நமது ராசியின் அடிப்படையில் ரத்தினத்தை அணிந்தால், நமது எதிர்காலத்தை பெரிய அளவில் மேம்படுத்தலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ரத்தினக் கற்கள் ஒரு நபரை அதிர்ஷ்டசாலியாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன.
சமீபத்திய புகைப்படம்
ஆனால் நீங்கள் தவறான ரத்தினத்தை அணிந்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ரத்தினக் கற்களைப் பற்றி உங்களுக்கு நல்ல அறிவு இல்லையென்றால், தவறான ஒன்றை அணிவதற்குப் பதிலாக அவற்றை அணியாமல் இருப்பது நல்லது.
மேஷம்
காலபுருஷனின் முதல் வீடாக விளங்கும் மேஷம் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். நிலம், தைரியம், வீரம், ரத்தம் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானுக்கு உரிய ராசி கல்லாக பவளம் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் பவளம் அணிவதால் உடல் மற்றும் மன வலிமை பெறும். செல்வம் சேரும், உறவுகள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி பெருகும். சிவப்பு நிறம் உடைய பவளம் மங்களகரமானது; செவ்வாய் கிழமை காலை குளித்த பின் வலது கை சுண்டு விரல் அல்லது ஆள்காட்டி விரலில் சிவப்பு நிற பவளம் அணிவது மங்களம் உண்டாக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் உள்ளார். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். சுக்கிர பகவானுக்கு உரிய ராசிகல்லாக வைரம் உள்ளது. வைரம் அணிவது ரிஷபம் ராசியினரின் கவர்ச்சி சக்தியை அதிகரிக்கும். இந்த ரத்தினம் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் என்பது நம்பிக்கை. வைர மோதிரம் அணிவதன் மூலம் சுக்கிரனின் அருளையும், ஆசியையும் பெற முடியும் என்பது ஜோதிடர்கள் கூற்று ஆகும். வெள்ளிக்கிழமை காலையில் குளித்துவிட்டு வலது கை நடுவிரலில் வைரத்தை அணிவது மங்களம் உண்டாக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார். புதன் கிரகத்திற்கு உரிய நிறம் பச்சை ஆகும். அறிவு, புத்திசாலித்தனம், நுண்ணறிவு, வியாபாரம், வணிகம், பேச்சு, எழுத்து ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார். மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பச்சை மரகதம் கொண்ட மோதிரங்களை அணியலாம். பேச்சு, வியாபாரம், ஆரோக்கியம், செல்வம் மற்றும் பல விஷயங்களில் சிறப்பாக செயல்பட பச்சை மரகதம் உதவுகிறது. புதன்கிழமை காலை குளித்த பின் வலது கை மோதிர விரலில் பச்சை மரகதத்தை அணியும் போது நன்மைகள் உண்டாகும். .
கடகம்
கடகம் ராசிக்கு உரிய கிரகம் ஆக சந்திர பகவான் உள்ளார். சந்திர பகவானுக்கு உரிய ரத்தினமாக முத்து உள்ளது. நமது மனதிற்கு உரிய கிரகம் ஆக சந்திர பகவான் உள்ளார். எனவே சந்திர பகவானுக்கு உரிய முத்தை அணிவதன் மூலம் வாழ்கையில் நன்மைகளை பெறலாம். கடக ராசிக்காரர்கள் வெள்ளை நிற முத்து அணியும் போது மன அமைதி மற்றும் ஆரோக்கியம் மேம்பாடு, ஆயுள் விருத்தி ஆகியவை உண்டாகும். முத்துக்கள் கடல் ஓடுகளில் இருந்து பெறப்படுகின்றன. சந்திர பகவானுக்கு உகந்த திங்கட்கிழமை காலை குளித்த பின் மோதிர விரலிலோ அல்லது வலது கை சுண்டு விரலிலோ முத்து அணியும் போது நன்மைகளை பெறலாம்.
சிம்மம்
சிம்மம் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் உள்ளார். இந்த ராசிக்காரர்கள் மாணிக்கம் அணியும் போது மிகுந்த நன்மைகளை பெறலாம். சம்பாத்தியம், நிர்வாகம், ஆளுமை ஆகிய பண்புகளுக்கு உரிய கிரகமாக சூரிய பகவான் உள்ளார். இதனை அணிவதன் மூலம் வியாபாரத்தில் லாபம், நல்ல ஆரோக்கியம், உயர் பதவி, புகழ் ஆகியவற்றை பெற முடியும். சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் குளித்த பின் வலது கை சுண்டு விரலில் மாணிக்கத்தை அணியும் போது நன்மைகள் உண்டு.
கன்னி ராசி
கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் பகவான் உள்ளார். புதன் கிரகத்திற்கு உரிய நிறம் பச்சை ஆகும். அறிவு, புத்திசாலித்தனம், நுண்ணறிவு, வியாபாரம், வணிகம், பேச்சு, எழுத்து ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார். இவர்கள் பச்சை மரகத கற்கள் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.