Colors Astrology: கருப்பு மற்றும் நீலம் வண்ணங்களை யார் அணியலாம்! யார் அணியகூடாது! ஜோதிடம் சொல்லும் உண்மை!
Apr 28, 2024, 06:14 AM IST
“உங்கள் அன்றாட வாழ்வில் அதிர்ஷ்ட நிறங்கள் சார்ந்த ஆடைகளையோ அல்லது அணிகலன்களையோ அணிவதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்”
சமீபத்திய புகைப்படம்
கருமை நிறம்
கருப்பு நிறத்தை யாரும் விரும்பமாட்டார்கள், ஆனால் ஒரு சிலருக்கு கருப்பு நிறம் நல்ல பலன்களை தரும். ஜோதிடத்தை பொறுத்தவரை எந்த ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் கருப்பு நிறம் ஏற்கத்தக்க நிறமாக இல்லை. ஆனால் இரண்டாம் நிலை அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறமாக கருப்பு நிறம் உள்ளது.
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் என்பது இரண்டாம் நிலை அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறமாக விளங்குகிறது.
யாருடைய ஜாதகத்தில் லக்னத்தில் ராகு உள்ளதோ அவர்களுக்கு கருப்பு நிறம் லக்கி கலராக இருக்கும். பிற ராசிக்காரர்கள் கருப்பு நிறத்தை தவிர்ப்பது சிறப்புத்தரும்.
குறிப்பாக செவ்வாய், திங்கள், விழாயன், ஞாயிறு கிழமைகளில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தை தவிர்ப்பது அவசியம்.
கருமை நிறம் என்பது கரும்பாம்பு என அழைக்கப்படும் ராகு பகவானின் நிறமாக உள்ளது. எனவே லக்னத்தில் ராகு பகவான் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே கருப்பு நிறம் லக்கி நிறமாக இருக்கும்.
நீலம் நிறம்
நீல நிறத்திற்கு உரிய கிரகமாக சுக்கிரன் விளங்குகிறது. கண்களை பறிக்கும் நிறங்களில் ஒன்றாக உள்ள நீல நிறத்தை சுக்கிரனுக்கு உரிய ராசி மற்றும் லக்னம் ஆன ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கார்களுக்கு லக்கி நிறமாக விளங்கும்.
பின்னர் மகர ராசி மற்றும் லக்னம், கும்பம் ராசி மற்றும் கும்ப லக்னம், கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நீல நிறம் லக்கி கலராக உள்ளது.
இந்த நிறம் கொண்ட பொருட்களை இவர்கள் உபயோகிக்கும் போது இவர்களுக்கு வெற்றிகள் கிட்டும்.
மேலும் சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் நீல நிறம் லக்கி நிறமாக விளங்குகிறது.
வெள்ளி, புதன், சனிக்கிழமைகளில் பிறந்தவர்களுக்கு நீல நிறம் வெற்றியை தரும் நிறமாக விளங்கும்.
தனுசு மற்றும் மீனம் ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் நீலம் நிறத்தை தவிர்க்க வேண்டும். அஷ்டமாதிபதிய தோஷத்தை சுக்கிரன் தருவதால் நீல நிறத்தை இவர்கள் தவிர்ப்பது சிறப்பு தரும். மேலும் விழாயன் கிழமைகளில் பிறந்தவர்கள் நீல நிறத்தை தவிர்ப்பது சிறப்புகளை தரும்.
அதிர்ஷ்ட நிறங்களை எப்படி பயன்படுத்துவது:
உங்கள் அன்றாட வாழ்வில் அதிர்ஷ்ட நிறங்கள் சார்ந்த ஆடைகளையோ அல்லது அணிகலன்களையோ அணிவதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். உங்கள் வீட்டில் அல்லது அறையில் அதிர்ஷ்ட நிறங்களை பயன்படுத்துங்கள். முக்கியமான நிகழ்வுகளுக்கு அதிர்ஷ்ட நிற உடைகளை அணியுங்கள். அதிர்ஷ்ட நிற பொருட்களை பரிசாக கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்