Sooriyan Chevvai Serkai: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் + செவ்வாய் சேர்க்கை வரமா? சாபமா? ஜோதிடர்கள் சொல்லும் உண்மை!-advantages and disadvantages of sooriyan chevvai combination in astrology - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sooriyan Chevvai Serkai: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் + செவ்வாய் சேர்க்கை வரமா? சாபமா? ஜோதிடர்கள் சொல்லும் உண்மை!

Sooriyan Chevvai Serkai: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சூரியன் + செவ்வாய் சேர்க்கை வரமா? சாபமா? ஜோதிடர்கள் சொல்லும் உண்மை!

Kathiravan V HT Tamil
Apr 23, 2024 05:22 PM IST

”நட்பு கிரகங்களான சூரியன் - செவ்வாய் இணைவு கொண்ட ஜாதகர்களுக்கு ஆளுமையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. அரச கிரகமான சூரியனும், சேனாதிபதி கிரகான செவ்வாயும் இணையும் போது ஜாதகருக்கு தான் என்ற எண்ணம் மிகுதியாக இருக்கும்”

சூரியன் செவ்வாய் சேர்க்கை வரமா? சாபமா?
சூரியன் செவ்வாய் சேர்க்கை வரமா? சாபமா?

நட்பு கிரகங்களான சூரியன் - செவ்வாய் இணைவு கொண்ட ஜாதகர்களுக்கு ஆளுமையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. அரச கிரகமான சூரியனும், சேனாதிபதி கிரகான செவ்வாயும் இணையும் போது ஜாதகருக்கு தான் என்ற எண்ணம் மிகுதியாக இருக்கும். 

லக்னம் முதல் 12 வீடுகளிலும் சூரியன் -செவ்வாய் இணைந்து இருந்தால் விதவை தோஷம் ஏற்படும் என்று முடிவுக்கு வர முடியாது. சூரியன் - செவ்வாய் இணைவு பெற்ற ஜாதகத்தில் ஆயிரத்தில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழலாம். 

சூரியன் செவ்வாய் இணைவு என்பது  மாங்கல்ய ஸ்தானம் என சொல்லக்கூடிய 8ஆம் இடத்துடன் தொடர்பில் இருந்தால் இந்த நிகழ்வு நடக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்று சொல்லலாம். அப்படி இருந்தாலும், இயற்கை சுபர் என்று சொல்லக்கூடிய சுக்ரன், குரு, வளர்பிறை சந்திரனின் பார்வை இருந்தால் இந்த தோஷம் ஒன்றும் இல்லாமல் போய்விடும். 

உதாரணமாக மேஷ லக்னத்தில் 8ஆம் இடமான விருச்சிகத்தில் சூரியன் - செவ்வாய் இணைவு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். 2 ஆம் இடமான ரிஷபத்தில் இருந்து குரு பகவான் 8ஆம் இடத்தை பார்த்தால் தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்.

சூரியன் - செவ்வாய் உடன் இணைந்த நிலையில் சுக்கிரன் இருந்தாலும் இந்த தோஷம் நிவர்த்தி ஆகும். 

வளர்பிறை சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்ற நிலையிலோ அல்லது மேஷம், மிதுனத்திலோ இருந்தாலும் இந்த தோஷம் நிவர்த்தி ஆகும். 

சேரும் அனைவருக்கும் குற்றம் தரும் அமைப்பு சூரியன் செவ்வாய் அமைப்புக்கு கிடையாது. ஒரு சில நேரத்தில் அரசாங்கத்தின் உயர் பதவிகள், மருத்துவத்தில் மிகப்பெரிய சாதனைகள்,   பொருளாதார வெற்றிகளை தரக்கூடிய அமைப்பையும் இந்த சூரியன் - செவ்வாய் அமைப்பு ஏற்படுத்தும். 

இயற்கை சுபர்களின் வீடுகளில் இந்த இணைவு இருந்தால் கடுமையான பாதிப்புகளை தருவதில்லை. உதாரணமாக தனுசு, மீனம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிகளில் சூரியன் - செவ்வாய் இணைவு இருந்தால் கடுமையான தோஷம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. 

மேலும் ஒரு ஜாதகருக்கு சூரிய திசையோ, செவ்வாய் திசையோ வரக்கூடிய சாத்தியம் இல்லாத போது இது போன்ற பாதிப்புக்களை ஜாதகர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை என ஜோதிடர் ராம்ஜி கூறுகிறார். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner