’மேஷம் முதல் மீனம் வரை!’ திருமணத்திற்கு பிறகு ஹீரோ ஆகும் யோகம் யாருக்கு? பட்டம், பதவி, புகழ் தேடி வரும் ரகசியம்!
Aug 19, 2024, 02:31 PM IST
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பல நுணுக்கமான முறைகளில் ஒன்றாக பாவத் பாகவம் உள்ளது. ஒரு பாகவத்திற்கு அதே அளவான எண்ணிக்கையில் உள்ள இன்னொரு பாவகம் என்பது அந்த வீடு தரக்கூடிய வேலையை சேர்த்து தரக்கூடிய விதி உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பல நுணுக்கமான முறைகளில் ஒன்றாக பாவத் பாகவம் உள்ளது. ஒரு பாகவத்திற்கு அதே அளவான எண்ணிக்கையில் உள்ள இன்னொரு பாவகம் என்பது அந்த வீடு தரக்கூடிய வேலையை சேர்த்து தரக்கூடிய விதி உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
பட்டம், பதவிகளை தரும் 10ஆம் இடம்
10ஆம் பாகவத்தின் வேலைகளை அதிகப்படியாக எடுத்து செய்யக்கூடிய விதிகொண்ட இடமாக ஏழாம் இடம் உள்ளது. உதாரணமாக மீன லக்னத்தை எடுத்து கொள்வோம். மீன லக்னத்தின் 10ஆம் வீடு தனுசு ஆகும். தனுசு ராசியில் இருந்து 10 வீடுகளை எண்ணினால் கன்னி ராசி வரும். மீனம் லக்னத்திற்கு பட்டம் பதவிகளை தரக்கூடிய அமைப்பை புதன் பகவான் கொடுப்பார்.
திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி!
10ஆம் இடத்திற்கு 10ஆம் இடம் என்று சொல்லக்கூடிய 7ஆம் வீட்டின் அதிபதி ஒரு ஜாதகத்தில் அதிக வலுவுடன் இருந்தால் சமுதாயத்தால் பாராட்டப்படும் அமைப்பையும், பட்டம் பதவிகள் பெறும் அமைப்பையும், தொழில் வளர்ச்சி பெறும் அமைப்பையும், தொழில் வளர்ச்சி பெறும் அமைப்பையும் ஜாதகர் பெறுகிறார். இந்த வளர்ச்சிகள் அனைத்தும் திருமணத்திற்கு பிறகு நடைபெறும். திருமண ஸ்தானமான 7ஆம் இடம் வலுப்பெற்ற பிறகு இயல்பாகவே இந்த ஜாதகர்களுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்.
இதன் படி மேஷம் ராசிக்கு துலாம், ரிஷபம் ராசிக்கு விருச்சிகம், மிதுனம் ராசிக்கு தனுசு, கடகம் ராசிக்கும் மகரம், சிம்மத்திற்கு கும்பம், கன்னி ராசிக்கு மீனம், துலாம் ராசிக்கு மேஷம், விருச்சிகம் ராசிக்கு ரிஷபம், தனுசுக்கு மிதுனம், மகரத்திற்கு கடகமும், கும்பத்திற்கு சிம்மமும், மீனத்திற்கு கன்னியும் 7ஆம் இடமாக வரும்.
திருமண பந்தத்திற்கு பின்னர் கிடைக்கும் நன்மைகள்!
பாகத் பாகவ விதிப்படி 10ஆம் இடத்திற்கு 10ஆம் இடமான 7ஆம் அதிபதி அந்த ஸ்தானத்தில் வலுப்பெறாமல் வேறு இடத்தில் வலுப்பெற்று உள்ள ஜாதகருக்கு பதவி, பட்டம், உயர்வு, முன்னேற்றம், கூட்டுத் தொழிலாளால் ஆதாயம், சமுதாயத்தால் அங்கீகாரம், கூட்டாளிகள் மூலம் வளர்ச்சி, திருமண பந்தம் சிறப்பாக அமைவது, திருமணத்திற்கு பிறகு வளர்ச்சி பெறுவது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.
மேஷம் லக்னத்திற்கு சுக்கிரன் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
ரிஷபம் லக்னத்திற்கு செவ்வாய் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
மிதுனம் லக்னத்திற்கு குரு உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
கடகம் லக்னத்திற்கு சனி பகவான் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
சிம்மம் லக்னத்திற்கு செவ்வாய் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
கன்னி லக்னத்திற்கு குரு உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
துலாம் லக்னத்திற்கு செவ்வாய் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
விருச்சிகம் லக்னத்திற்கு சுக்கிரன் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
தனுசு லக்னத்திற்கு புதன் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
மகரம் லக்னத்திற்கு சந்திரன் தேய்பிறையாக இருந்தால் 7ஆம் இடத்தில் ஆட்சி பெறுவது, அல்லது 5ஆம் இடத்தில் உச்சம் பெறுவது.
கும்பம் லக்னத்திற்கு சூரியன் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
மீனம் லக்னத்திற்கு புதன் உச்சம் மற்றும் ஆட்சி பெறுதல்
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.