’காம உணர்வு அதிகம் உள்ள ஜாதகர்கள் இவர்கள்தான்!’ ஜோதிடர்கள் சொல்லும் ரகசியம்!

By Kathiravan V
Apr 02, 2024

Hindustan Times
Tamil

காமம் என்பது உயிரினங்களின் தொடர்ச்சிக்கு இன்றியமையாத செயல்முறையாக விளங்குகிறது. காமத்தால் பெறும் இன்பம் உடல் மற்றும் மன ரீதியான மகிழ்ச்சியை வழங்குகிறது.

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது ஜாதகத்தில் ராசி என்பது உடலாகவும், லக்னம் என்பது உயிராகவும் கருதப்படுகிறது. ஒருவரது லக்னம்தான் எண்ண அலைகளை ஏற்படுத்துக்கிறது என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது. 

ஜாதகர் ஒருவருக்கு காம உணர்வு அதிகம் ஏற்படுவதற்கு உடல் சூடு அதிகம் ஆவதே காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். எனவே உஷ்ணத்தை உருவாக்கும் கிரகங்களாக சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு காம எண்ணங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

ஒரு ஜாதகர் சூரிய பகவானின் ராசியோ அல்லது சூரியனின் லக்னமோ, செவ்வாய் பகவானின் ராசியோ அல்லது லக்னமோ, சுக்கிர பகவானின் ராசியோ அல்லது லக்னமோ அமைந்துவிட்டால் அவர்களுக்கு காம எண்ணங்கள் சற்று கூடுதலாக இருக்கும். 

சந்திரனின் லக்னம் மற்றும் ராசியாக கடகம் உள்ளது. குருவின் லக்னம் மற்றும் ராசியாக தனுசு மற்றும் மீனம் உள்ளது. இவர்களுக்கு கண்டிப்பாக அதிக காம உணர்வுகள் இருக்கும் ஆனால் அவர்கள் அதை பொது வெளியில் பெரிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். 

புதனின் லக்னம் மற்றும் ராசிகள், சனி பகவானின் லக்னம் மற்றும் ராசிகளுக்கு காம உணர்வு இருதாலும் அது ஓரளவு கட்டுப்பாடோடு இருக்கும் என்பதால் இது வெளியில் தெரியாது. அதனை வெளிப்படுத்தவும் மாட்டார்கள். 

ரத்தத்திற்கு காரகனான செவ்வாய் பகவான் மற்றும் ஸ்னோகிதத்திற்குகாரகனான சுக்கிரன் கேந்திரமாக இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளிப்படையாக தெரியும். ஆனால், அதே செவ்வாயோ அல்லது சுக்கிரனோ பெண் ராசியில் இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளியில் தெரியாது. 

குரு பகவானுக்கும், சுக்கிரனுக்கும் திரிகோண அமைப்பு இருந்தால் கண்டிப்பாக காம உணர்வுகள் நிச்சயம் அதிகமாக இருக்கும், ஆனாலும் அது கட்டுப்பாட்டில் இருக்கும்.

’தவிட்டு பானையை தங்கம் ஆக்குவார்கள்!’ அவிட்டம் நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!