தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’திரிகோண நிலையில் சூரியன்! சனி!’ மேஷம் முதல் கன்னி வரை! மரண அடி வாங்க போகும் 6 ராசிகள்!

’திரிகோண நிலையில் சூரியன்! சனி!’ மேஷம் முதல் கன்னி வரை! மரண அடி வாங்க போகும் 6 ராசிகள்!

Kathiravan V HT Tamil

Nov 04, 2024, 04:32 PM IST

google News
நவம்பர் 4ஆம் தேதியான இன்று சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று துல்லியமான திரிகோண நிலையை அடைந்து உள்ளனர். துலாம் ராசியில் சூரிய பகவான் நீசமும், கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சியும் பெற்று உள்ளனர்.
நவம்பர் 4ஆம் தேதியான இன்று சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று துல்லியமான திரிகோண நிலையை அடைந்து உள்ளனர். துலாம் ராசியில் சூரிய பகவான் நீசமும், கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சியும் பெற்று உள்ளனர்.

நவம்பர் 4ஆம் தேதியான இன்று சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று துல்லியமான திரிகோண நிலையை அடைந்து உள்ளனர். துலாம் ராசியில் சூரிய பகவான் நீசமும், கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சியும் பெற்று உள்ளனர்.

நவம்பர் 4ஆம் தேதியான இன்று  சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று துல்லியமான திரிகோண நிலையை அடைந்து உள்ளனர். துலாம் ராசியில் சூரிய பகவான் நீசமும், கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சியும் பெற்று உள்ளனர். இந்த நிலை ஆனது ஸ்திரத்தன்மை, ஒழுக்கம் மற்றும் இணக்கமான வளர்ச்சி ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையைக் கொண்டுவருகிறது. இந்த அம்சம் சூரியனின் உயிர்ச்சக்தியை சனியின் கட்டமைப்போடு ஒருங்கிணைத்து, நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான ஆதரவான சூழலை உருவாக்குகிறது. இந்த திரிகோண நிலை என்பது கார்த்திகை மாத பிறப்பின் போது முடிவுக்கு வரும். சனி மற்றும் சூரிய பகவானின் திரிகோண அம்சம் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு அளிக்கும் பலன்களை தற்போது  பார்க்கலாம். 

சமீபத்திய புகைப்படம்

குரு தட்டி தூக்கப் போகிறார்.. இந்த ராசிகள் மீது அடி விழும்.. கதறி கதறி அழுவது உறுதி

Nov 26, 2024 03:00 PM

கேது கோடிகளை கொட்டுகிறார்.. பணத்தோடு விளையாடும் ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Nov 26, 2024 02:56 PM

சனியின் தாக்கம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்.. இவர்கள் எச்சரிக்கையா இருக்கணும்.. வேலை செய்யும் இடத்தில் கவனம்!

Nov 26, 2024 11:41 AM

மகாலட்சுமி ராஜ யோகம்: சந்திர செவ்வாய் சேர்க்கையால் ஜாக்பாட் அடிக்கப் போகும் அந்த 3 ராசிகள் யார் தெரியுமா?

Nov 26, 2024 11:17 AM

ராகு பகவானால் தனுசு ராசிக்கு நிம்மதி கிடைக்க போகுது.. மனைவி ஆதரவாக இருப்பார்.. நிதி பிரச்சனைகள் நீங்கும்!

Nov 26, 2024 11:12 AM

சனி பெயச்சியால் ஜாக்பாட் .. இந்த மூன்று ராசிக்கு இனி கவலை வேண்டாம்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.. நல்ல காலம் ஆரம்பம்!

Nov 26, 2024 10:34 AM

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தொடக்கத்தில் சவாலாக தொன்றும் செயல்களில் கவனமாக இருங்கள். அதை பார்த்து விலகி செல்ல வேண்டாம். அவை நீண்ட காலத்திற்கு பலனளிக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். இருப்பினும் குறுக்குவழிகளை நாட வேண்டாம். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் கிடைக்கும் என்பதால் எதிர்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சுபகாரிய தடைகள் அகலும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் கவனமாக இருப்பது அவசியம். ஏற்கெனவே காதல் உறவில் உள்ள ஜோடிகள் மிக கவனம் உடன் செயல்பட வேண்டிய நேரம் இது. திருமணம் குறித்து பெற்றோர்களுடன் முறையாக ஆலோசிக்க வேண்டியது அவசியம். பிரிந்த பழைய நண்பர்கள் ஒன்று கூடுவீர்கள். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் ஸ்திரத்தன்மை உடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. வேலை தேடுபவர்களுக்கு சவால்கள் நிறைந்த காலம். இருப்பினும் திறமைக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கும். பணியிடங்களில் மெதுவான மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். முதலீடுகளை கவனமாக திட்டமிட வேண்டிய காலம். பங்கு அல்லது கார் வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. தொழிலை விரிவாக்கம் செய்ய கூட்டாளிகளை தேர்வு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உடன் இருந்த பிரச்னைகள் தீரும். பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேரும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய காலம். 

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் விவேகமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய காலம் இது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும். சிலர் வாகனம் மற்றும் பங்குச்சந்தைகளில் முதலீடுகளை செய்வீர்கள். அதிக ரிஸ்க் நிறைந்த பிஸ்னஸ்களில் திறம்பட செயல்படுவீர்கள். கல்வியில் வளர்ச்சி உண்டாகும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் காலம் இது. உங்கள் பணிக்கு மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மதிப்பு அளிப்பார்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எடுத்து கொண்ட செயலை முடிப்பது சற்று சவாலாக இருக்கும். காதல் உறவுகள் வாழ்கையில் ஆனந்தம் தரும். ஏற்கெனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு உறவு வலுப்படும்.

 

அடுத்த செய்தி