தப்பி தவறி கூட இந்த 5 இடங்களில் துளசியை வளர்க்காதீங்க.. எந்த நேரங்களில் துளசியை தொட்டால் தொல்லை தொடரும் பாருங்க!
Oct 16, 2024, 11:22 AM IST
தினமும் துளசியை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் துளசியின் நறுமணம் உடலில் சேர்ந்தால் ஆரோக்கியம் பெருகும். ஆனால், இது பகலில் மட்டுமே. மாலைக்குப் பிறகு துளசியைத் தொட்டால், லட்சுமி தேவி கோபப்படுவாள் என்பது நம்பிக்கை.
இந்து மதத்தில், துளசி செடி ஆன்மீக வளர்ச்சி, தூய்மை மற்றும் தெய்வீக அன்பின் புனித சின்னமாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் வடிவமாக துளசி கருதப்படுகிறது. இதன் சுத்திகரிப்பு பண்புகள் மற்றும் மருத்துவ குணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. துளசி செடியை பக்தியுடன் தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு வளமும், பாதுகாப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. துளசியுடன் கூடிய வீட்டில் ஒருவருடைய மனம், உடல் மற்றும் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் என்பது நம்பிக்கை. துளசியை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு பாவங்கள் அழியும் என்பது நம்பிக்கை.
சமீபத்திய புகைப்படம்
தினமும் துளசியை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் துளசியின் நறுமணம் உடலில் சேர்ந்தால் ஆரோக்கியம் பெருகும். ஆனால், இது பகலில் மட்டுமே. மாலைக்குப் பிறகு துளசியைத் தொட்டால், லட்சுமி தேவி கோபப்படுவாள் என்பது நம்பிக்கை. சாஸ்திரப்படி கூட மாலைக்குப் பிறகு துளசியைத் தொடுவது நல்லதல்ல. எனவே இரவில் துளசி செடியை தொடாதீர்கள். இந்து மதத்தில் துளசி மிகவும் மரியாதைக்குரிய தாவரமாகவும், போற்றுதலுக்குக்கு உரிய தாவரமாகவும் வணங்கப்படுகிறது. ஆனால் அத்தகைய புனிதமான துளசி செடியை நம் வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் வைக்கக்கூடாது. ஐந்து இடங்களில் துளசி செடி வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. துளசி செடியை இந்த 5 இடங்களில் எங்கு வைத்தாலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே துளசி செடியை தவறுதலாக கூட இந்த இடங்களில் வைக்க கூடாது.
குளியலறை
துளசியை குளியலறை அல்லது கழிப்பறைக்கு அருகில் கண்டிப்பாக வைக்கக்கூடாது. அதன் புனித இயல்பு தூய்மையற்றதாகிறது. இந்த இடம் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பாதுகாப்பையும் குறைதாது மதிப்பிடுவதற்கு சமம். அது மட்டுமின்றி அப்படிப்பட்ட இடத்தில் துளசி செடியை வைத்தால் லட்சுமி தேவியின் அருளை இழக்க நேரிடும். வீட்டில் பிரச்சனைகள் பணக்கஷ்டம் வரத் தொடங்கும் என்பது நம்பிக்கை.
சமையலறை
இந்து சாஸ்திரத்தின்படி, துளசியை ஒருபோதும் சமையலறைக்கு அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம், புகை மற்றும் சமையல் வாசனை ஆகியவை துளசியின் புனிதத்தை மாசுபடுத்துவதாக நம்பப்படுகிறது. அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை குறைக்கிறது மற்றும் அதன் சுத்திகரிப்பு பண்புகளை நீக்குகிறது. எனவே ஆன்மீக வளர்ச்சிக்கு இது சாதகமற்றதாக கருதப்படுகிறது. அதனால் சமையலறையின் அருகாமையில் வைக்கக் கூடாது.
படிக்கட்டுகளுக்கு அடியில் வைக்க வேண்டாம்
துளசியை நம் வீட்டில் படிக்கட்டுக்கு அடியிலோ தரையிலோ வைக்கக்கூடாது. இது ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கிறது. ஆன்மீக வளர்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை நிறுத்துகிறது. வீட்டில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. துளசி செடி வைக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்மறை ஆற்றல் வீட்டில் வந்து சேரும்.
ஷூ ரேக்
துளசியை செருப்புகள் மற்றும் குப்பை கூடைகள் வைக்கப்படும் அழுக்கு இடங்களுக்கு அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் காலணிகளில் இருந்து வரும் தூசி, அசுத்தங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் துளசியின் புனித சக்திகளை மாசுபடுத்துகிறது. அதன் ஆன்மீகத்தை குறைக்கிறது. அதனால்தான் துளசியை எப்போதும் உயரமான இடத்தில் தொட்டியில் வைக்க வேண்டும்.
படுக்கையறை
துளசியை படுக்கையறைக்கு அருகில் அல்லது படுக்கையறையில் வைக்கக்கூடாது. ஏனென்றால் அது நெருக்கத்தைத் தடுக்கும் சக்திவாய்ந்த ஆன்மீக சக்தி. இது அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. அதன் இருப்பு தியானம் மற்றும் ஆன்மீகத்தை ஊக்குவிக்கிறது. அதனால்தான் இந்த செடியை நடுவதற்கு பூஜை அறை போன்ற சுத்தமான இடங்கள் ஏற்றதாக கூறப்படுகிறது.
வாஸ்து படி துளசியை பொருத்தமற்ற இடங்களில் வைப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது வாழ்க்கையில் துரதிர்ஷ்டங்களையும் தடைகளையும் கொண்டு வரலாம். அதனால்தான் துளசியை சரியான இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் அளிக்கும் என்பது நம்பிக்கை.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!