August Viruchigam Rasipalan: அடுத்த அம்பானியா? அதானியா? விருச்சிக ராசிக்கு ஆகஸ்ட் மாதம் சொல்லும் சேதி என்ன?
Jul 19, 2024, 09:16 AM IST
சனி மட்டும் 4ம் இடத்தில் இருக்கிறார். மற்றபடி, குரு-செவ்வாய் கூட்டணி உங்களை ஜெயிக்க வைக்கும். தொழிலில் விருச்சிகராசி, தடைகளை கடந்து ஆகஸ்ட் மாதத்தில் ஜொலிக்கப் போகிறீர்கள். சூரியன் உங்களுக்கான தொழில் விருத்தியை உறுதி செய்யப் போகிறார்.
ஆகஸ்ட் மாதம் தொடங்கப் போகிறது. எந்த ராசிக்கு அள்ளித்தரப் போகின்றன கிரகங்கள் என்கிற எதிர்பார்ப்பு, இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் பெரும்பான்மை ராசி என்று அறியப்படும் விருச்சிக ராசிக்கு, ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கப் போகிறது?
சமீபத்திய புகைப்படம்
விருச்சிகம் ராசிக்கு ஆகஸ்ட் எப்படி?
ஏகோபித்த எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளையும், வாரத்தையும், மாதத்தையும், ஆண்டையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் எந்த மாதிரியான பலனை தரப்போகிறது? கவலை வேண்டாம், ஆகஸ்ட் உங்களுக்கு சாதகமான மாதம் தான்.
அடுத்த அம்பானி நீங்களா இருக்கலாம்
சனி மட்டும் 4ம் இடத்தில் இருக்கிறார். மற்றபடி, குரு-செவ்வாய் கூட்டணி உங்களை ஜெயிக்க வைக்கும். தொழிலில் விருச்சிகராசி, தடைகளை கடந்து ஆகஸ்ட் மாதத்தில் ஜொலிக்கப் போகிறீர்கள். சூரியன் உங்களுக்கான தொழில் விருத்தியை உறுதி செய்யப் போகிறார். கூடவே சுக்கிரன் இருக்கிறார். உறுதியாக மாற்றம் வரும். அடித்து விளையாடப் போகிறீர்கள். தொழில் எங்கோ போகப் போகிறது. எதிர்பார்ப்புகளை மீறி நடக்கலாம். குருப்பார்வை எல்லாம் தரும்.
கெட்டிமேளம் தயாராக இருக்கா?
திருமண விவகாரங்கள் சிறப்பாக நடைபெறும். கிரகப்பார்வை நன்றாக இருந்தால், நினைத்த வரன் கிடைக்கும். குரு-செவ்வாய் கூட்டணி பார்வை, உங்கள் உணர்ச்சிப்பூர்வமான எதிர்பார்ப்பை அப்படியே உங்களுக்கு தரப் போகிறது. கணவன்-மனைவி இடையே சின்ன சின்ன பிரச்னைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கும் மாதம்.
மாணவர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு
மாணவர்களுக்கு கடுமையான உழைப்பு மட்டுமே பலன் தரும். முயற்சியை மட்டும் விடாமல் இருந்தால், நினைத்த இலக்கை எட்டுவீர்கள். உங்கள் முயற்சிக்கான பலனை அடையும் மாதம் தான் ஆகஸ்ட். எனவே மாணவர்கள் எடுத்த முயற்சியை கைவிடாமல் முயற்சிக்க வேண்டும். போட்ட முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
பெண்களே நீங்கள் தான் ராணி!
பெண்களுக்கு மனநிறைவான நிறைய சம்பவங்கள் நடக்கும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். மனஸ்தாபங்கள் நீங்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அன்பு மழையில் நனைவீர்கள். மனமகிழ்ச்சியை தரும் மாதமாக பெண்களுக்கு ஆகஸ்ட் இருக்கும்.
உடல் நலன் எப்படி இருக்கும்?
உடல் நலனில் பெரிய பாதிப்பு இருக்காது. இருப்பினும் இடுப்பு, கால் பகுதியில் கொஞ்சம் கவனம் தேவை. பெரிய பாதிப்பு இருக்காது. சிறு சிறு பாதிப்பாக தான் அதுவும் இருக்கும். வயதில் மூத்தவர்களுக்கு உடல்நலனில் ஆரோக்கியம் கூடும். பிரச்னைகள் நிவர்த்தியடையும். பணபலன்கள் வந்து சேரும். ஆகஸ்ட் மாதம் 2024 விருச்சிக ராசிகளுக்கு சனியை தவிர மற்ற எல்லா கிரகங்களும் சாதகமாக இருப்பதால், சிறப்பான மாதமாக இருக்கும். சனி பிரச்னையா என்றால், மற்ற ராசிகள் சாதகமாக இருப்பதால், சனி ஒதுங்கிக் கொள்வார்கள் அல்லது, விலகி கொள்வார். நீங்கள் நினைத்ததை எட்டிப் பிடிக்கும் மாதமாக ஆகஸ்ட் மாதம் இருக்கப் போகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்