தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrological Benefits Of Guru: ’மேஷம் முதல் கன்னி வரை!’ 6, 8, 12 இல் குரு மறைவதால் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Astrological Benefits of Guru: ’மேஷம் முதல் கன்னி வரை!’ 6, 8, 12 இல் குரு மறைவதால் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Kathiravan V HT Tamil

Sep 09, 2024, 05:09 PM IST

google News
Astrological Benefits of Guru: ஜோதிடத்தில் 6, 8, 12ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இயற்கை சுபர் ஆன குரு பகவான் ஒரு மனிதனை ஒழுங்கு படுத்தும் தன்மை கொண்ட கிரகம் ஆகும். குரு பகவான் மறைவது ஜோதிடத்தில் அவ்வளவு சிறப்பை தராது.
Astrological Benefits of Guru: ஜோதிடத்தில் 6, 8, 12ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இயற்கை சுபர் ஆன குரு பகவான் ஒரு மனிதனை ஒழுங்கு படுத்தும் தன்மை கொண்ட கிரகம் ஆகும். குரு பகவான் மறைவது ஜோதிடத்தில் அவ்வளவு சிறப்பை தராது.

Astrological Benefits of Guru: ஜோதிடத்தில் 6, 8, 12ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இயற்கை சுபர் ஆன குரு பகவான் ஒரு மனிதனை ஒழுங்கு படுத்தும் தன்மை கொண்ட கிரகம் ஆகும். குரு பகவான் மறைவது ஜோதிடத்தில் அவ்வளவு சிறப்பை தராது.

ஜோதிடத்தில் 6, 8, 12ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இயற்கை சுபர் ஆன குரு பகவான் ஒரு மனிதனை ஒழுங்கு படுத்தும் தன்மை கொண்ட கிரகம் ஆகும். குரு பகவான் மறைவது ஜோதிடத்தில் அவ்வளவு சிறப்பை தராது. இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர். குரு பகவான் மறையும் போது இந்த குணத்தில் சில மாறுபாடுகள் ஏறுபடும். தனத்திற்கு காரகன் ஆன குரு பகவான், தாரளமாக செலவு செய்யும் தன்மை உடையவர் அல்ல. அதே போல் தீவிரமாக செயலாற்றும் தன்மையும் இவருக்கு குறைவாக இருக்கும். குரு பகவான் மறையும் போது ஜாதகருக்கு கஞ்சத்தனம் இருக்கும். அதிக பொருள் தேடும் ஆசை இருக்கும். இதற்காக ஜாதகர்கள் குறுக்கு வழியை தேடுவர். 

சமீபத்திய புகைப்படம்

கேது பகவானின் பயணம்.. சிம்ம ராசிக்கு அடிக்க போகுது யோகம்.. ஆனால் இந்த விஷயத்தில் எச்சரிக்கை தேவை!

Nov 27, 2024 05:33 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 27, 2024 03:16 PM

புதன் பகவானின் ராசி மாற்றம்.. இந்த ராசியில் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.. சிக்கல்கள் தீரும்!

Nov 27, 2024 03:07 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 27, 2024 02:49 PM

மேஷம், மிதுனம், மீன ராசியினரே அள்ளிக் கொடுக்கும் லட்சுமி நாராயண ராஜ யோகம்.. ஜாக்பாட் உங்களுக்குதான்!

Nov 27, 2024 01:21 PM

ரிஷபம், மிதுனம், சிம்மம், கும்பம், ராசியினரே அடிக்குது யோகம்.. புதனின் நேரடி இயக்கத்தால் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

Nov 27, 2024 12:53 PM

மேஷம்

மேஷம் லக்னத்தில் குரு பகவான் 6ஆம் இடமான கன்னி, 8ஆம் இடமான விருச்சிகம், 12ஆம் இடமான மீனம் ஆகிய இடங்களில் மறைவார். இதில் விருச்சிகம் நட்பு வீடாகவும், மீனம் தனது சொந்த வீடாகவும் உள்ளது. 12ஆம் அதிபதி 12இல் ஆட்சி பெறுவதால் ஞானம், மோட்சம், வெளிநாட்டில் வசிக்கும் யோகம், வெளிநாடு பயணம் உள்ளிட்ட நற்பலன்களை தருவார். 6ஆம் இடத்தில் அமரும் போது சுப விரையங்கள், கடன் தொல்லைகளை ஏற்படுத்துவார். 

ரிஷபம் 

ரிஷபம் லக்னத்திற்கு 6ஆம் இடம் துலாம் ராசியில் அமர்வது பகை என்ற நிலை என்பதால் சிக்கல்களை தரும். ஆனால் 8ஆம் அதிபதி என்ற முறையில் 6ஆம் வீட்டில் மறைவது நல்லது. 8ஆம் வீட்டில் அவரே ஆட்சி பெறுவார் என்பதால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். ஆனால் அசிங்கம், அவமானம், உயரத்தில் இருந்து கீழே விழுவது உள்ளிட்ட கெடுபலன்கள் இருக்கும். ஆனாலும் உழைக்காமல் செல்வம் கிடைத்தல், பங்குச்சந்தையில் லாபம் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். 12ஆம் வீடான மேஷத்திலும் நட்பு நிலையிலேயே குரு இருப்பார். 

மிதுனம் 

மிதுனம் லக்னத்திற்கு குரு பகவான் மறைவது சிறப்பை தரும். குரு பகவான் மறைவதால் அதிக நன்மைகள் தரும் லக்னமாக மிதுனம் உள்ளது. இதனால் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 8ஆம் வீட்டில் குரு நீசம் அடைவார் என்பதால் குடும்ப மேன்மை பொருளாதார மேன்மை, பணம் சம்பாதிப்பதில் சிக்கல், நிலைத்த தொழில் இல்லாத தன்னை ஏற்படும். 12ஆம் வீட்டில் இருந்து 4 மற்றும் 6 வீடுகளை பார்ப்பதால் விரையங்களையும் உண்டாக்கித் தருவார். 

கடகம்

கடகம் லக்னத்திற்கு 6ஆம் வீட்டில் குரு பகவான் ஆட்சி பெறுவார். கடன், நோய், எதிரி, போட்டி, பொறாமை, வம்பு, வழக்குகளை அதிகம் தருவார். ஆனாலும் அரசு உத்யோகம் உள்ளிட்ட நன்மைகளையும் செய்வார். 8ஆம் வீடான கும்பம் ராசியில் மறையும் போது 9ஆம் இடத்தின் பாக்கிய ஸ்தான வேலைகள் நடக்காது. தகப்பனால் முன்னேற்றம் இல்லாத நிலை ஏற்படும். 

சிம்மம்

சிம்மம் லக்னத்திற்கு 6ஆம் இடத்தில் குரு மறைவது சிறப்பை தராது. 8க்கு உடையவன் நீசம் அடைவது ஆயுளை பாதிக்கலாம். ஜாதகருக்கு அவப்பெயர் உண்டாகும். பெரிய மனித தன்மையில் இருந்து விலக்கி வைக்கும். பணத்திற்காக எதையும் செய்ய துணிவு கொண்டவர்களாக இருப்பார்கள். லஞ்சம், லாவன்யம், கையூட்டு பெறுவார்கள். 12ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பது சிறப்புகளை தரும். 

கன்னி 

கன்னி லக்னத்திற்கு 6ஆம் இடத்தில் குரு பகவான் மறைவது திருமண வாழ்கையில் சிக்கல்கள், கல்வியில் தடை உள்ளிட்டவை ஏற்படும். 8ஆம் இடமான மேஷத்தில் நட்பு என்றாலும் அவ்வளவு சிறப்பான பலன்களை தருவது இல்லை. ஆயுள் தீர்க்கம் இருந்தாலும் விபத்துக்களில் சிக்கலாம். 12ஆம் இடமான சிம்மத்தில் குரு மறைந்தால் வெளிநாட்டு பயணம் ஏற்படும். முதலீடு மூலம் வருமானம் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி