Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பங்குச்சந்தையில் பணம் கொட்டும் யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!-stock market success with astrology profitable planetary systems and benefits - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பங்குச்சந்தையில் பணம் கொட்டும் யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!

Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பங்குச்சந்தையில் பணம் கொட்டும் யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!

Kathiravan V HT Tamil
Sep 09, 2024 03:20 PM IST

Stock Market Success with Astrology: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோர் உங்களின் 2ஆம் வீட்டில் உள்ள தன அதிபதி 6, 8, 12ஆம் இடங்களில் சென்று மறையக்கூடாது. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் பங்குச்சந்தை மட்டுமில்லாது வேறு எதிலும் முதலீடு போடக்கூடாது. கடன் கொடுத்தால் கூட திரும்பி வராது.

Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பங்குச்சந்தையில் பணம் கொட்டும் யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!
Money Luck: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பங்குச்சந்தையில் பணம் கொட்டும் யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!

பங்குச்சந்தை ட்ரேடிங் என்பது ஒரு வகையில் சூதாட்ட வடிவம் போன்றும் உள்ளது. ஆனால் நீண்டகாலம் முதலீடு செய்து லாபம் பெறுபவர்களும் உள்ளனர். 

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோர் உங்களின் 2ஆம் வீட்டில் உள்ள தன அதிபதி 6, 8, 12ஆம் இடங்களில் சென்று மறையக்கூடாது. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பை பெற்றவர்கள் பங்குச்சந்தை மட்டுமில்லாது வேறு எதிலும் முதலீடு போடக்கூடாது. கடன் கொடுத்தால் கூட திரும்பி வராது. 

முதல் விதி

ஒரு மகரம் லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். மகரம் லக்னத்திற்கு 2ஆம் அதிபதியாக சனி பகவான் உள்ளார். இவர் 6ஆம் இடமான மிதுனம், 8ஆம் இடமான சிம்மம், 12ஆம் இடமான தனுசு ராசியிலோ இருந்தால் பங்குச்சந்தை ஆகாது. இதில் 6ஆம் இடம் அதிநட்பு ஸ்தானம் ஆகும். 8ஆம் இடம் மிக கடுமையான விளைவுகளை தரும். 12ஆம் இடம் ஓரளவு நல்ல இடம் ஆகும். 6 மற்றும் 12ஆம் இடங்களில் தனாதிபதி இருந்தால் கூட நீண்ட கால முதலீடு கூட உங்களுக்கு ஓரளவு பலன் தரலாம். ஆனால் 8ஆம் இடத்தில் தன அதிபதி இருந்தால் முதலீடு மூழ்கும் அபாயம் ஏற்படும். 

இரண்டாம் விதி 

பங்குச்சந்தையில் பணம் சேர்க்க சாதூர்யம் அவசியம். இந்த அமைப்பை தரும் கிரகமாக புதன் பகவானும், ராகு பகவானும் உள்ளனர். புத்திசாலித்தனத்திற்கு புதனும், குறுக்கு வழிகளை கண்டறிய ராகுவும் வழி செய்கின்றனர். உங்கள் ஜாதகத்தில் புதன் பகவானும், ராகு பகவானும் நல்ல நிலையில் இருந்தால் பங்குச்சந்தை மூலம் ஆதாயம் கிடைக்கும் என்பது இரண்டாவது விதியாக உள்ளது. புதன் பகவான் மறையாமலும் அல்லது ஆட்சியோ உச்சமோ பெற்று இருக்க வேண்டும். ராகு பகவான் மறையாமலும், இயற்கை சுபர்கள் உடன் தொடர்பு இருப்பதும். ராகுவுக்கு வீடு தந்தவர்கள் வலுப்பெறுவதும் பங்குசந்தையில் ஆதாயத்திற்கு வழி வகை செய்யும். 

ராகு பகவான் இயற்கை சுபர்கள் உடன் தொடர்பு பெற்று இருந்தால் கண்டிப்பாக ஆதாயம் உண்டு. 

மூன்றாம் விதி

மூன்றாவதாக உங்கள் லாபாதிபதி பகை, நீசம், அதமனம், மறைவு, கிரக யுத்தம் ஆகியவற்றில் இருக்க கூடாது. 

ஒரு சிம்ம லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இவரது லாபாதிபதியாக புதன் பகவான் உள்ளார். புதன் பகவான் கிரகணம் அடைய மாட்டார். அதே நேரத்தில் கடும் பகை கிரகங்கள் ஆன சந்திரன், சனி, செவ்வாய் உடன் மிக நெருக்கமாக இருப்பது செயல்பாடுகளை பாதிக்கும். நீண்டகாலம் முதலீடு செய்து காத்து இருப்பதன் மூலம் பங்குச்சந்தையில் வெல்ல முடியும் என்பதால் ஜாதகருக்கு பொறுமை அவசியம்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner