தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 9ஆம் இட ரகசியங்கள்!

Astrological Benefits: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அதிர்ஷ்ட யோகங்கள் தரும் 9ஆம் இட ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil

Sep 10, 2024, 09:18 PM IST

google News
ஒரு மனிதன் அதிஷ்டசாலியா?, முன்னேறக் கூடியவனா?, வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியதைகளையும் விவரிக்கும் இடமாக 1, 5, 9ஆம் இடங்கள் உள்ளது. இந்த மூன்று இடங்களும் பாதிக்கப்பட கூடாது. (Pixabay)
ஒரு மனிதன் அதிஷ்டசாலியா?, முன்னேறக் கூடியவனா?, வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியதைகளையும் விவரிக்கும் இடமாக 1, 5, 9ஆம் இடங்கள் உள்ளது. இந்த மூன்று இடங்களும் பாதிக்கப்பட கூடாது.

ஒரு மனிதன் அதிஷ்டசாலியா?, முன்னேறக் கூடியவனா?, வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியதைகளையும் விவரிக்கும் இடமாக 1, 5, 9ஆம் இடங்கள் உள்ளது. இந்த மூன்று இடங்களும் பாதிக்கப்பட கூடாது.

ஜோதிடத்தில் 1, 5, 9 ஆம் ஸ்தானங்கள் லஷ்மி ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இது பொருள்வரும் ஸ்தானம், திரிகோண ஸ்தானம், விஷ்ணு ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது. எல்லா லக்னக்காரர்களுக்கும் 1, 5, 9ஆம் இடங்களுக்கு உரிய கிரகங்கள் நட்பு கிரகங்களாகவே இருக்கும். 

சமீபத்திய புகைப்படம்

கேது பகவானின் பயணம்.. சிம்ம ராசிக்கு அடிக்க போகுது யோகம்.. ஆனால் இந்த விஷயத்தில் எச்சரிக்கை தேவை!

Nov 27, 2024 05:33 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 27, 2024 03:16 PM

புதன் பகவானின் ராசி மாற்றம்.. இந்த ராசியில் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.. சிக்கல்கள் தீரும்!

Nov 27, 2024 03:07 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 27, 2024 02:49 PM

மேஷம், மிதுனம், மீன ராசியினரே அள்ளிக் கொடுக்கும் லட்சுமி நாராயண ராஜ யோகம்.. ஜாக்பாட் உங்களுக்குதான்!

Nov 27, 2024 01:21 PM

ரிஷபம், மிதுனம், சிம்மம், கும்பம், ராசியினரே அடிக்குது யோகம்.. புதனின் நேரடி இயக்கத்தால் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

Nov 27, 2024 12:53 PM

உதாரணமாக தனுசு லக்னத்தை எடுத்துக் கொண்டால் லக்னத்திற்கு உரியவர் ஆன குரு பகவான், 5ஆம் இடத்திற்கு உரிய செவ்வாய், 9ஆம் இடத்திற்கு உரிய சூரியன் ஆகியோர் நட்பு கிரகங்களாக உள்ளனர். 

ஒரு மனிதன் அதிஷ்டசாலியா?, முன்னேறக் கூடியவனா?, வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து பாக்கியதைகளையும் விவரிக்கும் இடமாக 1, 5, 9ஆம் இடங்கள் உள்ளது. இந்த மூன்று இடங்களும் பாதிக்கப்பட கூடாது. 

லக்னம் 

முதலாவதாக ஒருவருக்கு லக்னம் பாதிக்கவே கூடாது. லக்னாதிபதி பாவ கிரகம் ஆகவே இருந்தாலும் லக்னத்தில் வலுப்பெறுவது சிறப்பு. லக்னத்தில் இயற்கை சுபர்களின் தொடர்பு கிடைப்பது சிறப்பு தரும். ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருப்பது முதல்நிலை யோகத்தை தரும். இவர்களின் முயற்சி சிறப்பாக இருக்கும். எந்த சூழ்நிலையையும் ஜாதகர் சமாளிப்பார். லக்னத்தில் லக்னாதிபதி வலுப்பெற்றால் 7ஆம் பார்வையாக 7ஆம் இடத்தை பார்ப்பதால் வாழ்கைத் துணை சிறப்பாக இருக்கும், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள், கூட்டாளிகளால் முன்னேற்றம் ஏற்படும், சமுதாயத் தொடர்புகள் மதிப்புகளை தரும். லக்னம் பழுதுபட்டு இருப்பது, லக்னத்தில் பாவ அல்லது நீச கிரகங்கள் இருந்தால் ஜாதகர் தன்னம்பிக்கை குன்றியவராக இருப்பார். 

ஐந்தாம் இடம் 

குழந்தை பாக்கியம், பூர்வ புண்ணியம், மந்திர உபதேசம், குருமார்கள் அனுக்கிரகத்தை தரும் இடமாக 5ஆம் இடம் உள்ளது. ஒருவருக்கு 5ஆம் இடம் கெடக்கூடாது. அப்படி கெட்டுபோனால் சமூதாயத்தில் கௌரம், புகழ் கெடும். கடவுள் அருள் கிடைக்காது. 5ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் இருப்பது, 5ஆம் அதிபதி நீசம் பெறுவது, 5ஆம் இடத்தில் நீச கிரகம் அமர்வது மோசமான அமைப்பாக உள்ளது.

ஒன்பதாம் இடம் 

9ஆம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம் ஆகும். இந்த பிறவி எதற்கு எடுத்து உள்ளீர்கள், உங்கள் பூர்வ புண்ணியம் என்ன?, முன்னோர் வழியாக என்ன கிடைக்க போகிறது, உங்கள் முன்னேற்றம், வெளிநாடு பயணம், யோகங்களை அனுபவிப்பது உள்ளிட்டவற்றை குறிக்கும் இடமாக உள்ளது. 9ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற கிரகம், 9ஆம் அதிபதி உச்சம் பெற்ற நிலையில் இருப்பது அதிர்ஷ்டத்தின் திறவுகோல் ஆகும். 9ஆம் இடத்தில் நீசம் மற்றும் பாவ கிரகங்கள் இருப்பது, 9ஆம் அதிபதி கெட்டுப்போவது அதிர்ஷடம் இல்லாத நிலையை கொடுக்கும். 9ஆம் அதிபதி வலுப்பெறுவது முயற்சியில் வெற்றி, செல்வம் சேர்ப்பது, உயர்கல்வி பயில்வது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

 

 

அடுத்த செய்தி