தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope Luck: ‘6, 8, 12 - இடங்களில் 2ம் அதிபதி அஸ்தங்கதம்.. பொருளாதாரத்தை நசுக்கும் ராகு.. - தப்பிக்க என்ன செய்வது?

Horoscope Luck: ‘6, 8, 12 - இடங்களில் 2ம் அதிபதி அஸ்தங்கதம்.. பொருளாதாரத்தை நசுக்கும் ராகு.. - தப்பிக்க என்ன செய்வது?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 30, 2024 04:18 PM IST

Horoscope Luck: ‘6, 8, 12 - இடங்களில் 2ம் அதிபதி அஸ்தங்கதம் ஆகும் போது செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?

Horoscope Luck: ‘6, 8, 12 - இடங்களில் 2ம் அதிபதி அஸ்தங்கதம்.. பொருளாதாரத்தை நசுக்கும் ராகு.. - என்ன
Horoscope Luck: ‘6, 8, 12 - இடங்களில் 2ம் அதிபதி அஸ்தங்கதம்.. பொருளாதாரத்தை நசுக்கும் ராகு.. - என்ன

Horoscope Luck: பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி காண செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து அவிநாசி ஜோதிலிங்கம் பேசி இருக்கிறார். 

பொருளாதார கிரகம் 

இது குறித்து அவர் பேசும் போது, “பொருளாதாரத்திற்கான கிரகங்களாக பார்க்கப்படுவது சுக்கிரன் மற்றும் குரு. ஒரு ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி தனத்திற்கான இடமாக இருப்பார். அதாவது, உங்கள் லக்னத்திற்கு இரண்டாவது அதிபதி யாரோ, அவரை நாம் பொருளாதாரத்திற்கான கிரகமாக எடுத்துக் கொள்ளலாம். சுக்கிர பகவான் இலட்சத்தில் இருக்கக்கூடிய பணத்திற்கு காரகன். குரு பகவான் பெரும் பணத்திற்கு காரகன். அதாவது கோடியில் புரளும் பணத்திற்கு காரகன் ஆவான்.

இந்த பொருளாதாரத்தை, பிரமாண்டமாக காட்டக்கூடிய கிரகம் ராகு. இந்த பொருளாதாரத்தை நசுக்கி சுருக்கக்கூடிய கிரகம் கேது.. ஒரு ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி என்று சொல்லக்கூடிய கிரகமானது 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்தோ 90 அல்லது நீச்சம் அடைந்து இருந்தால், பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகும். இதனுடன், அஷ்டமத்து சனி, கண்டக சனி உள்ளிட்டவை இணையும் பொழுது, சொல்ல முடியாத போராட்டம் உருவாகும்.

என்ன பரிகாரம் 

இதற்கு பரிகாரம் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் மகாலட்சுமி ரங்கநாதர் கோயிலுக்கு வருடத்தில் ஒரு முறையேனும் வெள்ளிக்கிழமை சென்று வழிபட்டு வாருங்கள். அதேபோல வருடத்தில் ஒரு முறையேனும் திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் உள்ள குரு பகவானே வியாழக்கிழமை அன்று வழிபட்டு வாருங்கள்.

நீங்கள் பிறந்த மாதத்தில் பத்மநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அங்கு விளக்கு ஏற்றி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதே போல திருப்பதி கோயிலுக்கு மாதத்தில் வரக்கூடிய முதல் திங்கட்கிழமை சென்று வழிபடுங்கள். சோட்டானிக்கரை அம்மையாரை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அலங்காரமத்தில் பாருங்கள். இதை நீங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு பொருளாதாரம் உயர்கிறதோ இல்லையோ. நீங்கள் திருப்திகரமாக வளர்வதற்கு அவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சிம்மராசிக்காரர்களை பொருத்தவரை, அவரது ராசியில் சனிபகவான் வக்ர நிலை அடைந்திருக்கிறார். ஆகையால், அவர்களுக்கு ஜாக்பாட் யோகம் அடிக்கும் என்று ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், மீண்டும் எழும் குணம் கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்; சிம்ம ராசி அன்பர்களுக்கு, சனி பகவான் ஜூன் 12 முதல் நவம்பர் 4ம் தேதி வரை வக்ர நிலையில் பயணிக்கிறார். அவர் சமசப்தமாக வக்ர சனியாக, சிம்மத்தை பார்க்கிறார். இது என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்க்கலாம்.

ஜாக்பாட் யோகம் உறுதி;

இப்போது பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. போதுமான வருமானம் தங்கவில்லை. இரவில் தூக்கமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், உள்ளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

சமசப்தமாக இருக்கும் சனி பகவான் ராஜயோகத்தை நிச்சயம் தருவார். அரசியல் துறையில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள். அதே போல மருத்துவத்துறையில் இருக்கும் மருத்துவர்களும், பெரிய இடத்தை நோக்கி நகர்வர். விளையாட்டுத்துறையில் இருக்கும் நபர்களும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வர். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் பணிமாற்றம் கிடைக்கும்.

வருமானத்தை தண்ணீர் போல செலவழிக்கக்கூடாது. எல்லோரையும் நம்பி விடக்கூடாது.

சிம்ம ராசிக்கு இந்த வக்ர பெயர்ச்சிதான் ஜாக்பாட் யோகம் மூலமாக நிச்சயம் யோகம் கிடைக்கும். ஆனால், இந்த காலத்தில் நீங்கள் 3 விஷயங்களை கைகொள்ள வேண்டும். முதலில் விவேகமாக இருக்க வேண்டும். இரண்டாவது எல்லோரையும் நம்பி விடக்கூடாது. வருமானத்தை தண்ணீர் போல செலவழிக்கக்கூடாது. இந்தக்காலத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்”

இந்த மூன்று விஷயங்களை கைகொள்ளும் போது, உங்கள் எதிர்காலம் நல்ல நிலைமைக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். காரைக்கால் அருகில் இருக்கும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு சென்று வழி பட வேண்டும். என்று பேசினார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9