தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Vagra Peyarchi: ராகுவின் நட்சத்திரத்தில் நுழையும் சனி! பதறி சிதறி ஓடப்போகும் 5 ராசிகள்!

Sani Vagra Peyarchi: ராகுவின் நட்சத்திரத்தில் நுழையும் சனி! பதறி சிதறி ஓடப்போகும் 5 ராசிகள்!

Kathiravan V HT Tamil

Oct 02, 2024, 03:47 PM IST

google News
அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27 வரை சதயம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் இருப்பார். சனி பகவானின் பெயர்ச்சி மூலம் ராசிகளுக்கு ஏற்படம் பலன்களை தற்போது பார்க்கலாம்.
அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27 வரை சதயம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் இருப்பார். சனி பகவானின் பெயர்ச்சி மூலம் ராசிகளுக்கு ஏற்படம் பலன்களை தற்போது பார்க்கலாம்.

அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27 வரை சதயம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் இருப்பார். சனி பகவானின் பெயர்ச்சி மூலம் ராசிகளுக்கு ஏற்படம் பலன்களை தற்போது பார்க்கலாம்.

நவராத்திரியின் முதல் நாளானா அக்டோபர் 3ஆம் தேதி அன்று சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அதற்கு முன்னர் அதே நாளின் அதிகாலையில் சூரிய கிரகணமும் நடைபெற உள்ளது. 

சமீபத்திய புகைப்படம்

'படிப்பினைகள் பாடம் தரும்.. காலம் அழகாகும்.. வாழ்க்கை வளம் பெரும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 27, 2024 05:00 AM

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் ஆனவர் ராகுவின் நட்சத்திரம் ஆன சதயம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார். முன்னதாக சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்தார். இதன் காரணமாக ராசிகளில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் இப்போது சனியின் தாக்கம் மாறும். 

ராகு பகவான் ஆனவர் பாவம் விளைவிக்கும் கிரகமாக கருதப்படுகிறது.  சதயம் நட்சத்திரத்தில் சனி பகவானின் பெயர்ச்சி நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும். 

சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தவுடன் சனியின் தீவிரம் அதிகரிக்கும். இந்த வழியில், சனி தனது சொந்த ராசியில் விரைவான விளைவுகளை ஏற்படுத்துவார். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 27 வரை சதயம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் இருப்பார். சனி பகவானின் பெயர்ச்சி மூலம் ராசிகளுக்கு ஏற்படம் பலன்களை தற்போது பார்க்கலாம். 

மேஷம் 

மேஷம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக அதிகரிக்கும். உங்கள் குழந்தையைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். படிப்பில் தடை ஏற்படும். தலைவலி அல்லது மனக் கவலை அதிகரிக்கும். வயிறு மற்றும் கால் பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சமூக அந்தஸ்து, கௌரவம், மரியாதை உயரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மார்பு அசௌகரியம் மற்றும் இதய நோய் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். வாகனம் மற்றும் வீடு தொடர்பான செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் உடல்நலம் குறித்து மன அழுத்த ஏற்படலாம் என்பதால் கவனமாக இருங்கள். 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு வேலையில் அதிர்ஷ்டம் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் முலம் தகராறுகள் மற்றும் பதற்றங்கள் உண்டாகலாம். எனவே அமைதியாக இருப்பது முக்கியம். பொருளாதார அமைப்பில் மாற்றமும் வளர்ச்சிகளும் உண்டாகும். வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பங்குச்சந்தை முதலீடுகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள் .

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு வயிறு மற்றும் கால் பிரச்சினைகளால் டென்ஷன் ஏற்படலாம். பேச்சும் போது கவனமாக பேசவும். சிலருக்கு பற்களில் பிரச்னைகள் உண்டாகலாம். சிலருக்கு திடீர் செலவுகள் கூடும். வேலையில் தடை மற்றும் மரியாதை குறைவு ஏற்படலாம். கல்வி கற்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பம் அதிகரிப்பதோடு, தலையில் பிரச்னைகள் ஏற்படலாம். கூட்டுத்தொழில் விவகாரங்களில் சிக்கல்கள் வரலாம். தினசரி வருமானத்தில் மாற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் தொடர்பாக மன அழுத்தம் ஏற்படலாம். இதய நோய் அல்லது மார்பு நோய் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும்: 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு போட்டிகளில் எதிரிகளை வெல்லும் சூழ்நிலை உருவாகும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். தொலைதூர பயணங்களுக்கான செலவுகள் அதிகரிக்கலாம். கண், வயிறு, கால் பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன் பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு முயற்சியில் தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

அடுத்த செய்தி