Upajaya Sthanam Palangal: ’மேஷம் முதல் மீனம் வரை’ போட்டிகளில் வெற்றியை குவிக்கும் 3, 11ஆம் இட ரகசியங்கள்!
Sep 17, 2024, 05:07 PM IST
Upajaya Sthanam Palangal: 3 மற்றும் 11ஆம் இடங்களை பொறுத்தவரை நீங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் உங்களுக்கு அதிநட்பு கொண்ட நட்சத்திர சார அம்சங்கள் இதில் உள்ளன.
வெற்றியை விரும்பாத மனிதர்களே யாரும் இல்லை. வெற்றி, புகழ், பணம், செல்வாக்கிற்காக மனிதர்கள் ஏங்கி வருகின்றனர். இந்த வெற்றிகளை தரும் இடங்களாக உபஜெய ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 3, 6, 11ஆம் இடங்கள் உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
உபஜெய ஸ்தானங்கள்
இதில் 6ஆம் என்பது வம்பு, வழக்கு, கடன், நோய், எதிரி ஆகியவற்றை குறிக்கின்றது. மீதம் உள்ள 3 மற்றும் 11ஆம் இடங்கள் வெற்றி, மேன்மை, தைரியம், வீரியம், ஒழுக்கம் உள்ளிட்டவற்றை தருகின்றது.
ஜாதகத்தில் 3, 6, 8, 12ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் என்று சொன்னாலும் மூன்றாம் இடம் ஆனது பெரிய மறைவு ஸ்தானம் அல்ல. அது உபஜெயம், போஜனம், இளைய சகோதார்கள் ஆகியவற்றை குறிக்கும் இடமாக உள்ளது.
3 மற்றும் 11ஆம் இடங்களை பொறுத்தவரை நீங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் உங்களுக்கு அதிநட்பு கொண்ட நட்சத்திர சார அம்சங்கள் இதில் உள்ளன.
லக்ன வாரியான உபஜெய ஸ்தானங்களும் நட்பு நட்சத்திரங்களும்
மேஷம் லக்னத்திற்கு 3ஆம் இடமாக மிதுனமும் 11ஆம் இடமாக கும்பமும் உள்ளது. இதில் மீனத்தில் மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளது. கும்பத்தில் அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் உள்ளது. மேஷம் லக்னத்திற்கு குருவின் நட்சத்திரம் ஆன புனர்பூசம் அதி நட்பாகும்.
ரிஷபம் லக்னத்திற்கு 3ஆம் இடமாக கடகமும், 11ஆம் இடமாக மீனம் உள்ளது. இதில் வெற்றியை தரும் நட்சத்திரம் ஆன உத்ரட்டாதி, ரேவதி ஆகியவை உள்ளது.
மிதுனம் லக்னத்திற்கு சிம்மம் 3ஆம் வீடாகவும், மேஷம் 11ஆம் வீடாகவும் உள்ளது. இதில் பூரம், பரணி ஆகிய நட்சத்திரங்கள் உள்ளது.
கடகம் லக்னத்திற்கு 11ஆம் இடமாக துலாம், 3ஆம் இடமாக கன்னி உள்ளது. இதில் அதிர்ஷ்டம் தரும் நட்சத்திரம் ஆக உத்திரம், அஸ்தம், சித்திரை ஆகியவை உள்ளது.
சிம்மம் லக்னத்திற்கு 3ஆம் இடமாக துலாம், 11ஆம் இடமாக மிதுனம் உள்ளது. இதில் மிருகசீரிடம், புனர்பூசம், சித்திரை, விசாகம் உள்ளது.
கன்னி லக்னத்தில் 11ஆம் இடமாக கடகம், 3ஆம் இடமாக விருச்சிகம் உள்ளது. இதில் சூரியன், சனி நட்சத்திரங்கள் உள்ளது.
விருச்சிகம் லக்னத்தில் பகை கொண்ட குரு பகவான் நட்சத்திரம் மற்றும் நட்பு கொண்ட சனி நட்சத்திரம் மற்றும் தனது நட்சத்திரங்கள் உள்ளது.
துலாம் லக்னத்தில் கேது, சுக்கிரன், சூரியன் நட்சத்திரங்கள் உபஜெய ஸ்தானங்களில் உள்ளது.
விருச்சிகம் லக்னத்திற்கு 3ஆம் இடமாக மகரம், 11ஆம் இடமாக கன்னி உள்ளது. இதில் உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரம், அஸ்தம், சித்திரை ஆகியவை நட்பு பெற்ற நட்சத்திரங்கள் ஆகும்.
தனுசு லக்னத்திற்கு 3ஆம் இடமாக கும்பம், 11ஆம் இடமாக துலாமும் உள்ளது. இதில் சித்திரை, சுவாதி, விசாகம் ஆகியவை உள்ளது.
மகரம் லக்னத்திற்கு 3ஆம் இடமாக மீனமும், 11ஆம் இடமாக விருச்சிகம் உள்ளது. இதில் 3, 11ஆம் இடங்களில் தன்னுடைய நட்சத்திரங்களை கொண்டு உள்ளனர். விசாகம், அனுசம், கேட்டை, உத்ரட்டாதி, ரேவதி, கேட்டை ஆகியவை உள்ளன.
கும்பம் லக்னத்திற்கு 3ஆம் இடமாக மேஷமும் 11ஆம் இடமாக தனுசுவும் உள்ளது, இதில் பூராடம், பரணி நட்பு நட்சத்திரம் ஆகும்.
மீனம் லக்னத்திற்கு 3ஆம் இடமாக ரிஷபம், 11ஆம் இடமாக மகரமும் உள்ளது. கார்த்திகை, ரோகிணி, உத்ராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.