Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 3, 6, 10, 11 இட சூரியனால் பணம் கொட்டும் யோகம் யாருக்கு?
சூரிய பகவானுக்கு உகந்த ஸ்தானங்களாக மறைவு ஸ்தானம் அல்லது உபய ஜெய ஸ்தானம் என்று சொல்லப்படும் 3, 6, 10, 11ஆம் வீடுகள் ஆகும். இந்த இடங்களில் சூரிய பகவான் இருந்தாலே சிறப்புதான். இதன் அடிப்படையில் சூரியன் இருந்தாலே உங்களுக்கு சம்பாதிக்கும் வலிமை இருக்கும்.
பாவ கிரகங்கள் வரிசையில் உள்ள சூரிய பகவான் ஆத்மாவின் காரகன் ஆவார். லக்னத்திற்கு பொறுப்பு வகிக்கும் கிரகமும் அவர்தான். ஒருவரின் சம்பாத்திய திறமை, அதிகாரம், தன்னம்பிக்கை அளவு, தகப்பன் உடனான உறவு, துணிச்சல், முயற்சி, புத்திசாலித் தனம் ஆகியவற்றை குறிக்கும் கிரகம் ஆக சூரியன் உள்ளார்.
சூரிய பகவானுக்கு உகந்த ஸ்தானங்களாக மறைவு ஸ்தானம் அல்லது உபய ஜெய ஸ்தானம் என்று சொல்லப்படும் 3, 6, 10, 11ஆம் வீடுகள் ஆகும். இந்த இடங்களில் சூரிய பகவான் இருந்தாலே சிறப்புதான். இதன் அடிப்படையில் சூரியன் இருந்தாலே உங்களுக்கு சம்பாதிக்கும் வலிமை இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நீங்கள், உங்கள் தகப்பனை விட உயரமான இடங்களை அடைவீர்கள். குறிப்பாக 3 மற்றும் 11ஆம் இடங்களில் சூரியன் இருப்பது வாழ்கையில் அற்புதமான முயற்சிகளை தந்து வாழ்கையில் வெற்றி பாதையில் அழைத்து செல்வார்.
வாழ்கைத் துணையை மரியாதை உடன் நடத்தும் தன்மை சூரியன் 3, 6, 10, 11ஆம் இடங்களில் இருப்பவர்களுக்கு இருக்கும். இதில் 10ஆம் இடத்தில் சூரியன் இருக்கும் போது இயற்கையாகவே திக்பலம் பெறுவார்.
லக்ன வாரியாக உபஜெய ஸ்தானங்களில் சூரியன் இருக்கும் ராசிகள்:-
மேஷம் லக்னத்திற்கு சூரியன் மிதுனம், கன்னி, மகரம், கும்பத்தில் இருக்க வேண்டும்.
ரிஷபம் லக்னத்திற்கு கடகம், துலாம், கும்பம், மீனம் ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும். இதில் 6ஆம் இடத்தில் சூரியன் நீசம் பெற்றாலும் அமர்ந்த ஸ்தானத்தின் அடிப்படையில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் லக்னத்திற்கு சூரியன் ஆனவர் சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும்.
கடகம் லக்னத்திற்கு கன்னி, தனுசு, மேஷம், ரிஷபம் ஆகிய ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும்.
சிம்மம் லக்னத்திற்கு துலாம், மகரம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளின் சூரியன் இருக்க வேண்டும்.
கன்னி லக்னத்திற்கு விருச்சிகம், கும்பம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளின் சூரியன் இருக்க வேண்டும்.
துலாம் லக்னத்திற்கு தனுசு, மீனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளின் சூரியன் இருக்க வேண்டும்.
விருச்சிக லக்னத்திற்கு மகரம், மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளின் சூரியன் இருக்க வேண்டும்.
தனுசு லக்னத்திற்கு கும்பம், ரிஷபம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளின் சூரியன் இருக்க வேண்டும்.
மகரம் லக்னத்திற்கு மீனம், மிதுனம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும்.
கும்ப லக்னத்திற்கு மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும்.
மீனம் லக்னத்திற்கு ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம் ஆகிய ராசிகளில் சூரியன் இருக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.