Vinayagar Chaturthi Special: ஒரே இடத்தில் 16 விநாயகரின் அருளைப் பெற வேண்டுமா?
Sep 17, 2023, 02:28 PM IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கணபதியை வழிபட்டு வாருங்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அருள்புரிவார்.
விநாயகர் என்றால் மேலாணவர் என்று பொருள் படும், தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். அப்பேற்பட்ட விநாயகர் ஒரே இடத்தில் 16 வடிவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சமீபத்திய புகைப்படம்
பதினாறு விநாயகரின் அருளைப் பெற வேண்டுமா?.. நவதிருப்பதிகள் எனப் போற்றப்படும் வைணவ திருத்தலங்களில் முதல் திருப்பதியாகத் திகழும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திற்கு வாருங்கள். இங்கு தான் திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருளால் பேசும் சக்தியை பெற்ற குமரகுருபரர் பிறந்தார். இவர் காசி சென்று இந்து மதத்தின் சிறப்புகளை எடுத்துச் சொன்னார் என்று கூறப்படுகிறது.
குமரகுருபரரின் பெருமை அறிந்த பாதுஷா மன்னர் மடம் நிறுவ நிலங்களை வழங்கினார். அதில், 16 விநாயகரை பிரதிஷ்டை செய்தார் குமரகுருபரர். இதனை அறிந்த தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஆதினம், அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டத்திலும் பதினாறு விநாயகருக்குரிய வடிவத்தை ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்தார். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பதினாறு விநாயக விக்கிரகங்களும் வட்ட வடிவமாக சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன.
விநாயகருக்குரிய நாட்களில் அவருக்கு சாற்றப்படும் வஸ்திரம், பூ, பிரசாதங்கள் பதினாறு என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடுகின்றனர். அவரின் திருநாமங்களை பதினாறு முறை சொல்லி வழிபடுபவர்கள் பதினாறு பேறுகளையும் தடையின்றி பெறுவர் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலில் விநாயகர் சதுர்த்தி மிக முக்கிய விழாவாகும். அன்றைய தினம் பதினாறு விநாயகர்களுக்கும் பதினாறு வகையான அபிஷேகங்களும், பதினாறு வகை நைவேத்தியங்களும் படைக்கப்படும்.
விநாயகரின் 16 பெயர்கள்:
1. பால கணபதி
2. தருண கணபதி
3.பக்தி கணபதி
4.விக்னராஜ கணபதி
5.ஷிப்ர கணபதி
6.ஹேரம்ப கணபதி
7. வீர கணபதி
8. சக்தி கணபதி
9. திக்விஜய கணபதி
10. லட்சுமி கணபதி
11. மகா கணபதி
12. விஜய கணபதி
13. சித்தி கணபதி
14. உச்சிஷ்ட கணபதி
15. நிருத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்