தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun-mars: மகரத்தில் கும்மியடிக்கப் போகும் சூரியன் - செவ்வாய்: அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

Sun-Mars: மகரத்தில் கும்மியடிக்கப் போகும் சூரியன் - செவ்வாய்: அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

Marimuthu M HT Tamil

Feb 02, 2024, 11:23 PM IST

google News
ஜோதிட சாஸ்திரத்தில் மகரத்தில் சூரிய பகவானும் செவ்வாயும் இணைவதால் ஏற்படும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் மகரத்தில் சூரிய பகவானும் செவ்வாயும் இணைவதால் ஏற்படும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் மகரத்தில் சூரிய பகவானும் செவ்வாயும் இணைவதால் ஏற்படும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் தைரியத்தைத் தரக்கூடியவர். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் பகவான், மகர ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். அப்போது மகரத்தில் சூரியனும் சஞ்சரித்து வரும் நிலையில் செவ்வாயும் இணைவதால் சில ராசியினர் அபரிவிதமான பலன்களைத் தரும். அப்படி வெற்றி வாகை சூடும் நற்பேறு வாய்த்துள்ள ராசிகள் குறித்துக் காணலாம்.

சமீபத்திய புகைப்படம்

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Dec 22, 2024 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 22, 2024 10:58 AM

யாருக்கெல்லாம் முத்து அணிந்தால் செல்வம் பெருகும்.. யார் அணிய கூடாது தெரியுமா.. முத்து வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க!

Dec 22, 2024 10:35 AM

யாருங்க இந்த பாபா வங்கா.. என்னது 2025 ல் பொன்னாக ஜொலிக்க காத்திருக்கும் 5 ராசிகளை கணித்திருக்கிறாரா!

Dec 22, 2024 10:08 AM

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

மேஷம்: இந்த ராசியினருக்கு மகர ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் இணைவால் ஆதித்ய மங்கள யோகம் உண்டாகிறது. தொழிலில் முன்னேற்றம் பெறும் வாய்ப்பு உண்டாகியுள்ளது. பணியிடத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பணிவாய்ப்பு கிடைத்துள்ளது. சைடு பிசினஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு இத்தனை நாட்களாக இல்லறத்துணையுடன் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். நிதி நிலை மேம்படும். சிறுதொழில் முனைவோருக்கு நல்ல லாபம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும். வீட்டில் வசதிகள் அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்: இந்த ராசியினருக்கு இக்காலத்தில் நீங்கள் நினைத்த இடத்தில் வேலைக்கு முயற்சிகள் செய்யும்பட்சத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சில தடைகள் வந்துபோகும். அனைத்து பணிகளும் வேகம் எடுக்கும். புதிய தொழில்முனைவோருக்கு ஏற்ற காலகட்டம் இதுவாகும்.

விருச்சிகம்: இக்காலகட்டத்தில் குடும்பத்தினரின் அன்பு அதிகரிக்கும். இல்வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்குகள் மறையும். தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாழ்க்கை அமையும். பொருளாதார நிலை வலுவடையும்.

மீனம்: இக்காலகட்டத்தில் உங்கள் வீட்டில் விருப்பமான பொருட்களை வாங்கிப்போடுவீர்கள். உடல் நலம் மேம்படும். படிப்பில் சுட்டியாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வங்கியில் நிதியிருப்பு மேம்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி