தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  2025ல் குரு பெயர்ச்சி.. வம்பு வழக்குகள் முடிந்து செல்வ வளத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள்

2025ல் குரு பெயர்ச்சி.. வம்பு வழக்குகள் முடிந்து செல்வ வளத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil

Nov 01, 2024, 05:35 PM IST

google News
2025ல் குரு பெயர்ச்சி.. வம்பு வழக்குகள் முடிந்து செல்வ வளத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
2025ல் குரு பெயர்ச்சி.. வம்பு வழக்குகள் முடிந்து செல்வ வளத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

2025ல் குரு பெயர்ச்சி.. வம்பு வழக்குகள் முடிந்து செல்வ வளத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் பன்னிரெண்டு ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சமீபத்திய புகைப்படம்

விசாக நட்சத்திரம்.. சுக்கிரனின் அதிர்ஷ்டத்தில் குதிக்கும் 3 ராசிகள்.. பணத்தோடு விளையாட்டு ஆரம்பம்

Nov 16, 2024 03:10 PM

சனி 3 ராசிகள் உள்ளே கால் வைத்தார்.. சங்கடங்கள் தீரும்.. இனி இந்த ராசிகள்.. தொட முடியாது ராஜா!

Nov 16, 2024 03:00 PM

செவ்வாய் பட்டாபிஷேகம் தொடக்கம்.. தலைகளாக பிடித்து வாழும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் ஓடி வருகிறது..!

Nov 16, 2024 02:27 PM

கடகம், சிம்மம், மீனம் ராசியினரே.. சனி பகவானின் கோபம் சுட்டெரிக்கும்.. எச்சரிக்கையா இருங்க!

Nov 16, 2024 01:19 PM

சனி சட்டென்று அடித்தார்.. பட்டென்று புகுந்த ராகு.. இனி இந்த ராசிகள்.. கவலை வேண்டாம்.. உச்சம் தொடுவது உறுதி!

Nov 16, 2024 10:21 AM

மிதுனத்தில் புகுந்து துலாமில் வெளிவரும் கேது.. 2 ராசிகள்.. இனி அசைக்க முடியாத பணமழை.. 2025 முதல் யோகம்

Nov 16, 2024 09:56 AM

குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இந்த ஆண்டு அவர் ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

இன்னும் சில மாதங்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்நிலையில் குரு பகவான் தனது ராசியையும் மாற்றுகிறார். தற்போது, செல்வம் மற்றும் ஞானத்தின் மூலமாக இருக்கும் குரு பகவான் ரிஷப ராசிக்கு அதன் முழுப் பலன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

வரும் 2025ஆம் ஆண்டில், குரு பகவான் தனது ராசியை ஒரு முறை அல்ல, மூன்று முறை மாற்றுவார். குரு பகவான் வரும் மே 14, 2025 வரை ரிஷப ராசியில் இருப்பார். அதன் பிறகு, மே 14, 2025 முதல் மிதுன ராசியில் நுழைவார்.

அதன் பிறகு, வரும் அக்டோபர் 18அன்று, ராசி அடையாளம் மீண்டும் மாறி கடகத்தில் குரு பகவான் நுழைகிறார். அதன்பின், 2025ஆம் ஆண்டின் இறுதியில், குரு பகவான் பிற்போக்கு கட்டத்தில், மாறி, டிசம்பர் 5ஆம் தேதி கடகத்திலிருந்து மிதுனத்திற்கு மீண்டும் மாறுகிறார்.

பொதுவாக அறிவு, கல்வி, செல்வம், ஆன்மிகத்திற்குப் பொறுப்பான பிரஹஸ்பதி, பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றி வர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். இதனால் அடுத்த ஆண்டு, அதிக அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசியில் 2025ஆம் ஆண்டில், நடக்கும் குரு பெயர்ச்சியானது கிரகத்தின் அதிபதியான மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லதாகவே இருக்கும். கல்வித் துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். இந்த நேரத்தில் மேஷ ராசியினரின் நிதி நிலை வலுவாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

மிதுனம்:

2025 குருவின் அடையாளமாக இருக்கப் போகிறது. இந்நிலையில் மிதுன ராசியில் நடந்த குருவின் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் அற்புதமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயதார்த்தம் கைகூடும். 2025ஆம் ஆண்டில், நீங்கள் நிதி ரீதியாக மிகவும் வளர்ச்சியடைவீர்கள். மேலும் நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம். மொத்தத்தில் அடுத்த வருடம் உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி சுபமாகவே இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம் பெருகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சுபகாரியங்களுக்காக பணத்தைச் செலவு செய்வீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி நன்மை தரும். கடந்த கால வழக்குகளுக்கு துலாம் ராசியினரால் தீர்வு காணப்படும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியுள்ள பணம் இந்த காலகட்டத்தில் உங்கள் கைகளுக்கு வரும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை