Mahavir Jayanti: நெல்லையில் மகாவீரர் ஜெயந்தி விழா உற்சாகக் கொண்டாட்டம்!
- சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகாவீரர் ஜெயந்தி. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப்படும் இந்த விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலியில் ஜெயின் சமூகத்தினர் சிறப்பு ஊர்வலம் மேற்கொண்டனர். இதில், பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.