தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Vengai Vayal Case Cbcid Enquiry Started

வேங்கைவயலில் சிபிசிஐடி விசாரணை துவங்கியது

Priyadarshini R HT Tamil
Jan 17, 2023 10:14 AM IST

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

வேங்கைவயலில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர்தொட்டி
வேங்கைவயலில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர்தொட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின்பேரில்தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள்மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்டசிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  

வெள்ளனூர் காவல் நிலையத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 36 மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதியப்பட்டது. மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்குஅனுப்பப்பட்டது. 

மேலும் அரசு பேராசிரியர்கள் முனைவர்சுவாமிநாதன் தேவதாஸ், முனைவர் ஆர்.ராஜேந்திரன், கோகருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் அடங்கிய சமூக நீதி கண்காணிப்புகுழு சம்பவம் குறித்து அண்மையில் வேங்கைவயலில் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து கலெக்டர் கவிதா ராமுவிடமும் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, எஸ்பி வந்திதா பாண்டேவிடம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

இந்த சூழலில் வேங்கைவயல்வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்மந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்யவும் வழக்கைசிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து சிபிசிஐடி இவ்வழக்கு விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான குழுவினர் வேங்கைவயல், இறையூர் பகுதிகளில் விசாரணையை தொடங்கினர். மேலும் மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர்தொட்டி, இறையூரில் உள்ள கோயில் ஆகிய பகுதிகளை சிபிசிஐடி போலீசார் பார்வையிட்டனர். அப்போது இதுவரை புதுக்கோட்டை மாவட்ட போலீசாரால் இவ்வழக்கு தொடர்பாக பராமரிக்கப்பட்டு வந்த விசாரணை அறிக்கைகள், 85 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள், அவர்களிடம் பெறப்பட்ட வீடியோ பதிவுகள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரிடம் புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி தலைமையிலான குழுவினர் ஒப்படைத்தனர். 

இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில் வேங்கைவயலில் சிபிசிஐடி விசாரணையை துவங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்